Home Srilanka கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடையவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தப்படுவார்கள் - இராணுவ தளபதி!

கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடையவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தப்படுவார்கள் – இராணுவ தளபதி!

கொரோனா தொற்றுக்குள்ளானவருடன் தொடர்புடையவர்கள் வீட்டிலே தனிமைப்படுத்தப்படுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பை பேணியவர்கள் முன்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டிறிருந்தாலும், இனி தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படமாட்டார்கள், ஆனால் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுவார்கள், என தெரிவித்துள்ளார்.

எனவே, இராணுவத் தளபதி அத்தகைய நோயாளிகளை மற்ற நபர்களுடன் எந்தவிதமான தொடர்புகளும் இல்லாமல் வீட்டுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை மறுஆய்வு செய்த பின்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து இந்த புதிய நடவடிக்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

இதற்கிடையில், ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா ஆபத்து குறைந்துவிட்டால், ஊரடங்கு உத்தரவை தளர்த்த அவர்கள் தயங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -