Home International சில்வராடோ காட்டுத்தீ- 100,000பேர் வெளியேற்றம்!

சில்வராடோ காட்டுத்தீ- 100,000பேர் வெளியேற்றம்!

தெற்கு கலிபோர்னியாவில் பரவியுள்ள காட்டுத்தீ, 100,000பேரை வெளியேற்ற வழிவகுத்துள்ளது.

லொஸ் ஏஞ்சல்ஸின் தெற்கே ஒரஞ்ச் கவுண்டியில் திங்கட்கிழமை சூரிய உதயத்திற்கு சற்று முன்னர் சில்வராடோ தீ ஏற்பட்டது.

பிற்பகல் வாக்கில், தீ சுமார் 7,200 ஏக்கர் (2,915 ஹெக்டேர்) எரிந்ததாக அரசாங்க தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 5,000 தீயணைப்பு வீரர்கள் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

18 ஆண்டுகளில் மிக மோசமான காட்டுத்தீ, கலிபோர்னியாவில் கடந்த ஒகஸ்ட் மாதம் பொங்கி எழுந்தது.

இந்த காட்டுத்தீயினால் 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சில்வராடோ தீயில் காற்று தீப்பிழம்புகளை இர்வின் நகரில் உள்ள வீடுகளுக்கு நெருக்கமாக தள்ளுகிறது. இங்கு சுமார் 280,000 மக்கள் வசிக்கின்றனர்.

காட்டுத்தீயை சமாளிக்கும் போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -