Home Sports மகத்தான சாதனை நாயகன் சங்காவுக்கு பிறந்தநாள்!

மகத்தான சாதனை நாயகன் சங்காவுக்கு பிறந்தநாள்!

இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான சங்கா, இன்று (செவ்வாய்க்கிழமை) தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு உலகெங்கிலும் உள்ள இரசிகர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் வீரர்கள் சமூகவலைதளத்தின் ஊடாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரான சங்கா, 134 டெஸ்ட் போட்டிகளில் 12,400 ஓட்டங்களையும், 404 ஓருநாள் போட்டிகளில் 14,234 ஓட்டங்களையும், 56 ரி-20 போட்டிகளில் 1,382 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -