மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு சகல மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தம், சிகை அலங்கார நிலையங்களுக்கு பூட்டு வர்த்தக நிலையங்களில் அனைத்துவிதமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றவும் இந்த தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறுவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நேற்று (26) மாலை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.