Home Breaking News லலிதா ஜூவல்லரி; பிரபல நகை கொள்ளையன் முருகன் சிறையில் உயிரிழந்தார்!

லலிதா ஜூவல்லரி; பிரபல நகை கொள்ளையன் முருகன் சிறையில் உயிரிழந்தார்!

திருச்சி மாநகரில் சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நள்ளிரவில் சுவரை துளையிட்டு ₹13 கோடி மதிப்புள்ள, 28 கிலோ தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதையடுத்து மாநகர காவல் ஆணையர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்ந கொள்ளையை திருவாரூர் சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த முருகன் தலைமையிலான கும்பல் நடத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளைக்கு உதவிய மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த கணேசன், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், முருகன் அக்கா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.

முருகன் உள்ளிட்டோரை தனிப்படை போலீசார்தீவிரமாக தேடி வந்த நிலையில் முருகன் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான முருகனின் அக்கா மகன் சுரேஷும் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.murugan 2 jpg

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -