Home Srilanka அரச தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளார் மைக். பொம்பியோ!

அரச தலைவர்களை இன்று சந்திக்கவுள்ளார் மைக். பொம்பியோ!

உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக். பொம்பியோ இன்றைய தினம் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அதன்படி மைக் பொம்பியோ இன்று ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய பல கட்சிப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடபடவுள்ளார்.

பாதுகாப்பு சார்ந்த இரு தரப்பு ஒத்துழைப்புகளில் இலங்கையின் பூரணமான பங்களிப்புகள் மற்றும் பங்குடமை என்பன ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடவுள்ளனர்.122865545 2719653761588534 6715493180940858026 n

அதேபோன்று மிலேனியம் சவால் ஒப்பந்தம், எக்சா மற்றும் சோபா ஆகிய ஒப்பந்தங்களின் அடுத்த கட்டம் குறித்து இதன் போது ஜனாதிபதியுடன் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு மிக நீண்ட கால நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இரு நாடுகள் சார்ந்த பல முக்கிய விடயங்கள் குறித்து நேருக்கு நேர் பேசப்படுமென கொழும்பு இராஜதந்திரிகள் குறிப்பிடுகின்றனர்.

அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக். பொம்பியோ நேற்றிரவு 7.35 மணியளவில் 36 அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலயைத்தை வந்தடைந்தார்.

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரிகள் அமெரிக்க தூதுக்குழுவை வரவேற்றனர்.

இந் நிலையில் இன்றைய தினம் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து விட்டு, இத் தூதுக்குழு பிற்பகல் மாலைத்தீவுக்கு புறப்படவுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -