Home Srilanka இலங்கையில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு : அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

இலங்கையில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பு : அமெரிக்க இராஜாங்க செயலாளர்!

இலங்கையில் மேலும் பல முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன மற்றும் மைக் பொம்பியோ ஆகியோருக்கிடையில், வெளிவிவகார அமைச்சில் இன்றையதினம் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்படி, குறித்த சந்திப்பின் பின்னர், அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இலங்கைக்கான விஜயத்தின் நோக்கம் குறித்து தெளிவுபடுத்துமாறு, ஊடகவியலாளர் ஒருவர் மைக் பொம்பியோவிடம் வினவினார்.

இந்த நிலையில், குறித்த கேள்விக்கு பதிலளித்த போதே, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரு நாடுகளுக்கும் இடையிலான உறவையும், அபிவிருத்தியையும் மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்ல எமக்கு சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

எதிர்காலத்தில் இலங்கையின் தனியார்துறை உள்ளிட்ட ஏனைய துறைகளில் அபிவிருத்திகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்ள நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்துடன் இலங்கையில் மேலும் முதலீடுகளைக் கொண்டுவரவும் எதிர்பார்க்கின்றோம்.

நாம் சீனா போன்று கிடையாது மிகவும் வித்தியசாமான நாடாகும்.இலங்கை மக்களின் உரிமைகள், சுயாதீனத்துவம் மற்றும் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயகப் பண்புகளை உறுதிப்படுத்த வேண்டும்” என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவையும் சந்தித்தார்.

இந்த சந்திப்பு, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரவு குறிப்பிட்டது.

அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்றையை தினம் நாட்டை வந்தடைந்தனர்.

இதற்கமைய மைக் பொம்பியோவுடன் 36 பேர் அடங்கிய உயர்மட்ட தூதுக்குழுவொன்றும் நாட்டுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Secretary Pompeo tweet

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -