Home International கறுப்பின வாலிபரின் உயிரிழப்புக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை!

கறுப்பின வாலிபரின் உயிரிழப்புக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை!

அமெரிக்காவில் பொலிஸ் அதிகாரிகளால் கறுப்பின வாலிபர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது.

கற்கள், கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றால் பொலிஸாரைத் தாக்கிய போராட்டக்காரர்கள் பொலிஸாரின் கார்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த வன்முறையில் பொலிஸ் அதிகாரிகள் 30 பேர் படுகாயம் அடைந்தனர் இதன் காரணமாக அந்த நகரில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நீடிப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா நகரில் நேற்று முன்தினம் மாலை கறுப்பின வாலிபர் ஒருவர் கையில் கத்தியுடன் சுற்றி திரிவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாருக்கும் குறித்த வாலிபருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அந்த வாலிபர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கறுப்பினத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் வால்டர் வாலஸ் (வயது 27) என்பது தெரியவந்தது.

இதற்கிடையில் பொலிஸ் அதிகாரிகளால் கறுப்பின வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அந்நகரில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

அதனைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது இந்தப் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்துள்ளது.police gun shooting

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -