Home International டிரம்பின் ஆட்சி சட்டவிரோதமானது- பரபரப்பை அதிகரித்துள்ள ஹிலாரி கிளிண்டன்!

டிரம்பின் ஆட்சி சட்டவிரோதமானது- பரபரப்பை அதிகரித்துள்ள ஹிலாரி கிளிண்டன்!

2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட ஹிலாரி கிளின்டன் டிரம்பை விட அதிக வாக்குகளை பெற்றிருந்த போதிலும் எலக்டோரல் காலேஜ் (electoral college) எனப்படும் தேர்வுக்குழுவில் 77 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார்.

இதுகுறித்த நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஹிலாரி, 2016 ஆம் ஆண்டின் தேர்தலில் தனக்கு எதிராக தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

டிரம்ப் மற்றும் ரஷ்ய ஊடகங்கள் அந்த தேர்தல் முடிவை தன்னிடமிருந்து திருடி விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னைப்பற்றி ரஷ்ய ஊடகங்கள் தவறான பிரசாரம் மேற்கொண்டதால் டிரம்புக்கு வாக்களிக்காதவர்கள் வீட்டிலேயே இருக்கவோ அல்லது மூன்றாம் தரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவோ தூண்டப்பட்டனர் என அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -