அமெரிக்காவின், டென்னிசி மாநிலத்தில் பாடசாலை பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சட்டனூகோவிற்கு வடக்கே உள்ள மீக்ஸ் பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலை 58 இன் 7700 தொகுதிகளில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 7 வயது சிறுவனம் ஒருவனும், பஸ்ஸின் சாரதியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 5 சிறுவர்கள் சட்டனூகோவில் உள்ள சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.