HomeInternationalபிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் படகு விபத்து; சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலி!

பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் படகு விபத்து; சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் பலி!

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நால்வர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.30 மணியளவில் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 15 அகதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக நோர்ட் பிராந்தியத்திற்கான நிர்வாகம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த நால்வரில் ஐந்து மற்றும் எட்டு வயதான இரண்டு சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்

200820090814 01 migrants dover england 0815 exlarge 169

201027163243 migrant boat sinking intl super 169

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -