Home International புருணை இளவரசர் காலமானார் - 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை இளவரசர் காலமானார் – 7 நாட்கள் துக்கம் தினம் அனுஷ்டிப்பு!

புருணை நாட்டு இளவரசர் அஸிம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

புருணை நாட்டு சுல்தானின் மகனான 38 வயதுடைய இளவரசர் அஸிம் கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் அவர் இப்போது சிகிச்சைப் பலனின்றி கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனை அந்நாட்டு அரசு, தேசிய வானொலியில் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அந்நாட்டில் 7 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் அஸிம் பிரின்ஸ் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அஜிம் யூ ஆர் நாட் யூ மற்றும் தி ஹேப்பி பிரின்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களை அவர் தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.201026055442 file prince azim brunei 2013 exlarge 169

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -