மேல் மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் மொத்தம் 15 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை 96 பொலிஸார் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் 708 பேர் சுய தனிமைப்படுத்தலிலும் உள்ளனர்.
இதற்கிடையில் கொழும்பு மோசடி விசாரணைப் பணியகத்தில் ஒரு அதிகாரி கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த 23 பேர் தனிமைப்படுத்தலுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்.