Home Srilanka மைக்பொம்பியோ - ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு; அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்!

மைக்பொம்பியோ – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பு; அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சற்று முன்னர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.122481465 352469899321273 2831425687431484395 n

ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டுச் சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் எனவும்,

சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்ல அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாகவும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டிருந்தது.

இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ள இராஜாங்க செயலாளர், தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கும் செல்லவுள்ளார்.

இலங்கை விஜயத்தை முடித்த அவர் மலேசியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -