HomeSrilankaமைக் பொம்பியோவுக்கு எழுதப்பட்ட கடிதம்!

மைக் பொம்பியோவுக்கு எழுதப்பட்ட கடிதம்!

ஸ்ரீலங்காவிற்கும் சீனாவிற்குமிடையிலான நெருக்கமானது ஸ்ரீலங்காவை சீனத்தின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது.

ஸ்ரீலங்காவிற்கு பயணமாகியுள்ள அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகத்தின் 2020க்கான ஆண்டறிக்கையில் கூறியிருப்பது போல், சீன அரசுக்குச் சொந்தமான நிறுவனமொன்றிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள ஸ்ரீலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிலை என்பது, இந்தியப் பெருங்கடலுக்குள் அதிகார நீட்சிக்கு இத்துறைமுகதளத்தை சீனம் இராணுவ நோக்கில் பயன்படுத்த விரும்புவதாகத் தெரிகிறது.

மனிதவுரிமை மீறல்களிலும், சுற்றுசூழலை வலிந்து அழிவுப்பதிலும், சீனத்தின் நடத்தை என்பது உலகறிந்த விடயம் என்பதும், சீனம் இத்துறைமுகத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றிய அச்சம் அறிவார்ந்த ஒன்றாகும்.

ஆகவே, இந்தச் சிக்கல்களைக் கவனிக்க உங்கள் பதவிப் பொறுப்பின் அதிகாரத்தையும் விருப்புரிமையையும் பயன்படுத்துவது குறித்துக் கருதிப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இதேவேளை, தமிழினப்படுகொலைக்கான பொறுப்புக்கூறல், அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சீனம் பயன்படுத்திக் கொள்ளல் ஆகிய வியடங்களில் ஸ்ரீலங்காவை நேரடியாக கேள்விக்குட்படுத்துமாறு கோரி நிக்கிறோம்.

அதேபோன்று, இலங்கைத்தீவின் இறுதிப்போரின் போது, 70 000க்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, ஸ்ரீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களுக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் நம்பத்தக்க சான்றுகள் இருப்பதாக, ஐநாவின் முன்னாள் பொதுச் செயலர் பான் கி மூன் அமர்த்திய வல்லுநர் குழு அறிக்கையினை ஞாபகப்படுத்துகிறோம்.

கடந்த 2015ம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை உயராணையர் அலுவலகம் தந்த ஸ்ரீலங்கா பற்றிய புலனாய்வு (OISL) அறிக்கையில் முதன்மையாக ஸ்ரீலங்கா அரசு அமைப்புசார் குற்றங்கள் புரிந்ததாகக் கூறப்பட்டுள்ளதனையும் எடுத்துக் காட்டுகிறோம்.

அதேவேளை அமைதிக்கும் நீதிக்கும் இப்பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஆகச் சிறந்த தீர்வாக, ஸ்கொட்லாந்திலும், எரித்ரியாவிலும், கொசாவோவிலும் நடத்தப்பட்டது போல் தமிழர்களுக்கான ஒரு பொதுவாக்கெடுப்பே என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நம்பிக்கை என்றும் அந்தக் கடிதத்தில் உருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளார்.BCDD25D5 EFA1 48A9 9121 05F460C87949

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -