Home Sports 88 ஓட்டங்களினால் டெல்லியை வீழ்த்திய ஐதராபாத்!

88 ஓட்டங்களினால் டெல்லியை வீழ்த்திய ஐதராபாத்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் அணி 88 ஓட்டங்களினால் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று துபாயில் நடைபெற்ற 47 ஆவது லீக் ஆட்டத்தில் டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.AI 8816

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி களத்தடுப்பை தேர்வு செய்ய ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி டேவிட் வோர்னரும், விருத்திமான் சஹாவும் ஆரம்ப வீரர்களாக களமிறங்கினர்.

கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித் வோர்னர் ஆரம்பித்திலிருந்தே அதிரடி காட்ட ஆரம்பித்தார்.

ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு தெறிக்க விட்டார். ரபடாவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விரட்டியடித்து அதிரடி காட்டினார்.

25 பந்துகளில் தனது 47 ஆவது அரைசதத்தை பூர்த்தியும் செய்தார்.

அதனால் முதல் 6 ஓவர்களில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்களை குவித்தது.

வேர்னரின் அதிரடியால் ரன்ரேட் 10 ஓட்டங்களுக்கு மேலாக எகிறியது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 107 (9.4 ஓவர்) எட்டிய போது வோர்னர் 34 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக 66 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மனிஷ் பாண்டே களமிறங்கினார்.

வோர்னருக்கு பிறகு ரன்விகிதத்தை உயர்த்தும் பொறுப்பை கையில் எடுத்து கொண்ட விருத்திமான் சஹாவும், டெல்லி அணியின்பந்து வீச்சுகளை பந்தாடினார்.

எனினும் சதத்தை நோக்கி முன்னேறிய விருத்திமான் சஹா 45 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கலாக 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் நிறைவில் ஐதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களை குவித்தது.

இந்த தொடரில் ஐதராபாத் அணியின் அதிகபட்சமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

மனிஷ் பாண்டே 44 ஓட்டங்களுடனும், கேன் வில்லியம்சன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பின்னர் இமாலய இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் (0) முதல் ஓவரிலேயே வீழ்ந்தார். அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோனிஸ் (5 ஓட்டம்) வெளியேறினார்.

இந்த சரிவில் இருந்து டெல்லி அணியால் இறுதிவரை நிமிரவே முடியவில்லை. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (7 ஓட்டம்), ஹெட்மயரும் (16 ஓட்டம்) சோபிக்கவில்லை. அதிகபட்சமாக ரிஷாப் பண்ட் 36 ஓட்டங்களையும், ரஹானே 26 ஓட்டங்களையும் எடுத்தனர்.

முடிவில் டெல்லி அணி 19 ஓவர்களில் 131 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 88 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

ஐதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ரஷித்கான் 4 ஓவர்களில் 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சண்டிப் சர்மா, நடராஜன் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும், சபாஷ் நதீம், ஜோசன் ஹோல்டர் மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -