HomeInternationalஅமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 தொற்று பாதிப்பு பதிவானது!

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 தொற்று பாதிப்பு பதிவானது!

அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 81 ஆயிரத்து 581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரத்து 030பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தொற்று பரவியதிலிருந்து அமெரிக்காவில் பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும். முன்னதாக கடந்த 23ஆம் திகதி 81ஆயிரத்து 424பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்ததே நாளொன்றுக்கான அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த நாடாக விளங்கும் அமெரிக்காவில், இதுவரை மொத்தமாக, 91இலட்சத்து 20ஆயிரத்து 751பேர் பாதிக்கப்பட்டனர். இரண்டு இலட்சத்து 33ஆயிரத்து 130பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை 29இலட்சத்து 54ஆயிரத்து 409பேர் வைரஸ் தொற்றுக்காக, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 16ஆயிரத்து 866பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை மொத்தமாக, 59இலட்சத்து 33ஆயிரத்து 212பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -