இன்று மட்டக்களப்பில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பெரிய போரதீவு பட்டாபுரத்தில் ஒருவருக்கும், வாழைச்சேனையில் இருவருக்கும் என மொத்தமாக மட்டக்களப்பில் இதுவரை 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரிய போரதீவு பட்டாபுரத்தில் தொற்றுக்குள்ளான குறித்த நபர் பெரியபோரதீவு காளி கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள கொழும்பிலிருந்து வருகை தந்துள்ளதாக அறிய முடிகிறது.
இதனையடுத்து குறித்த தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.