HomeLifestyleஉங்க தொப்பையை எளிதில் இதை கரைக்க இந்த 6 ஆயுர்வேத பொருட்களே போதும்!

உங்க தொப்பையை எளிதில் இதை கரைக்க இந்த 6 ஆயுர்வேத பொருட்களே போதும்!

பொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

தொப்பையைக் குறைக்க உடற்பயிற்சி மையங்கள் சென்று அங்குள்ள இயந்திரங்களில் உடற்பயிற்சி செய்தால் மட்டும் போதாது.

சரியான உணவுப் பழக்க வழக்கம் வாழ்க்கை முறை போன்றவற்றால் மட்டுமே நம் உடலைக் கட்டுப்போக்குடனும் உறுதியுடனும் தொப்பை இல்லாமல் வைத்திருக்க முடியும்.

அந்தவகையில் தொப்பை எளியமுறையில் கரைக்க கூடிய ஒரு சில மூலிகை ஆயுர்வேத பொருட்களை பற்றி இங்கு பார்ப்போம்.

ககுல் என்பது ஒரு மூலிகையாகும் இந்த மூலிகை எடை இழப்பிற்கு அதிகமாக உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது.

மேலும் இது உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரை கிளிசரைடுகளின் அளவையும் குறைக்கிறது.

இலவங்கபட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்குவது முதல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவது வரை பல நன்மைகளை கொண்ட மூலிகையாக உள்ளது.

மேலும் உளவியல் ரீதியாக இது மனநிறைவிற்கான உணர்வை அதிகப்படுத்துகிறது. எனவே தினமும் அருந்தும் தேநீரில் சிறுது இலவங்க பட்டையை கலந்து அருந்தலாம்.

புளியானது எடை இழப்பை ஏற்படுத்தும் அதன் குணத்தின் காரணமாக பிரபலமாக அறியப்படுகிறது.

உங்கள் உடலில் கொழுப்பை உருவாக்கி சேமித்து வைக்கும் திறனை இது தடுக்கும் என கருதப்படுகிறது.

ஹைட்ராக் சிட்ரிக் அமிலம் (எச்.சி.எ) இந்த பழத்தின் முக்கிய பொருளாக உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதோடு பசியையும் குறைக்கிறது.

திரிபாலா கலவையானது உடலுக்குள் நச்சுக்களை அகற்ற உதவும் சிறந்த மூலப்பொருட்களை உருவாக்குகிறது.

மேலும் இது உங்கள் வயிற்றை சுத்தப்படுத்துகிறது இது உங்கள் செரிமான சக்தியையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது திரிபாலா தொப்பை கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.

மூக்கிரட்டை என்பது ஒரு மூலிகை தாவரமாகும் இது எடை இழப்பை குறைக்க உதவுவதாக பரவலாக அறியப்படுகிறது மேலும் இது சிறுநீர் பை மற்றும் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது எனவே உங்கள் வயிற்றில் உள்ள கூடுதல் எடையை குறைக்க இது சிறப்பாக உதவி செய்யும்.

வெந்தயம்

இவை செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் தொப்பை கொழுப்பை இழக்க உதவி செய்கின்றன இந்த விதைகளில் நீரில் கரையக்கூடிய கேலக்டோமனன் என்னும் கூறு உள்ளது. இது உங்கள் பசியை கட்டுப்படுத்துகிறது. அதாவது இது நீண்ட நேரத்திற்கு உங்களுக்கு பசி வராமல் பார்த்துக்கொள்ளும் மேலும் இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கிறது

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -