HomeBreaking Newsஐ.மக்கள் சக்தியில் இருந்து 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்!

ஐ.மக்கள் சக்தியில் இருந்து 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம்!

ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் அதன் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியின் அணியில் இருந்து வெளியேற்றியுள்ளதாக அறிவிக்கும் கடிதம் ஒன்றை எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற அவையின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களே அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் உப செயலாளர் டயனா கமகே உட்பட 9 பேரே இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் ஆசனங்களை ஒதுக்குவதற்கு பதிலாக ஆளும் கட்சியின் வரிசையில் ஆசனங்களை ஒதுக்குமாறும் கிரியெல்ல தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

டயனா கமகே, அரவிந்தகுமார், இசாக் ரஹ்மான், பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹாரிஸ், எம்.எஸ். தவ்பிக், நசீர் அஹமட், ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் உள்ளிட்டோரே ஐக்கிய மக்கள் சக்தியின் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -