HomeSrilankaகொரோனா கொத்தணிகளுடன் சம்பந்தப்படாத நோயாளி காலியில் அடையாளம் காணப்பட்டுள்ளாரா?

கொரோனா கொத்தணிகளுடன் சம்பந்தப்படாத நோயாளி காலியில் அடையாளம் காணப்பட்டுள்ளாரா?

வெளிநாடு செல்வதற்காக விசா பெற்றுக்கொள்ளும் நோக்கில் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் PCR பரிசோதனை செய்து கொண்ட ஒருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலி – அக்மீமன, தொட்டகொட பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட மருத்துவ நிபுணர் தெனுர கே.சிங்காராச்சி தெரிவித்துள்ளார்.

வெளிநாடு செல்லவிருந்த இந்த நபர் தனியார் மருத்துவ நிலையம் ஒன்றில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டுள்ளார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளரான இந்த நபர் நேற்று ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் கொழும்பு துறைமுகத்தின் கப்பல் தடாகம், மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை, பேலியகொடை மீன் சந்தை ஆகிய கொரோனா கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர் அல்ல என காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் மருத்துவர் கூறியுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -