HomeSrilankaசர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை!

சர்வதேச ரீதியில் 112 ஆவது இடத்திற்கு முன்னேறிய இலங்கை!

உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 112ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் உலகளவில் மக்களை அச்சுறுத்திவரும் நிலையில், இலங்கையிலும் அதன் பாதிப்பு தற்போதைய காலங்களில் அதிகரித்து வருகிறது.corona ws

குறிப்பாக மினுவங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணி காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் மாத்திரம் பதிவாகியுள்ள மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 205ஆக அதிகரித்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் காரணமாக நாட்டில் 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

இவ்வாறான நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கடந்த மாதமளவில் சுமாராக 30ஆவது இடத்தில் இருந்த இலங்கை கடந்த சில தினங்களில் சடுதியாக முன்னேறி 112ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கு முன்னர் இலங்கையில் கொரோனா பரவல் ஆரம்பமாகிய காலப்பகுதியில் கடந்த ஜுன் மாதமளவில் இலங்கை 100ஆவது இடத்தில் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -