பிரான்ஸில் நைஸ் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு போப்பாண்டவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதே போல மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் மொஹமட், மகாதீர் மொஹமட், “மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க பிரெஞ்சு மக்கள் தங்கள் மக்களுக்கு கற்பிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
குறைந்த நேரத்தில் மூன்று தாக்குதல் சம்பவம் பிரான்ஸிலும், சவுதியிலும் நடந்துள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தாக்குதல் சம்பவத்தினை அறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்ததாகவும், இந்த விடயத்தில் பிரான்சுக்கு முழு ஆதரவுடன் துணை நிற்பதாகவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.