HomeSrilankaமஹிந்த எனது நண்பர்- சஜித்திற்கு அறிவித்துவிட்டே வாக்களித்தேன்; டயனா கமகே!

மஹிந்த எனது நண்பர்- சஜித்திற்கு அறிவித்துவிட்டே வாக்களித்தேன்; டயனா கமகே!

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாவிடம் அறிவித்து விட்டே தான் வாக்களித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

சிங்கள இணையத் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உரிமை எனது கணவரிடம் உள்ளது. இதனால், என்னை அந்த கட்சியில் இருந்து நீக்க முடியாது.

பிரதமர் மகிந்த ராஜபக்ச எனது நண்பர். எனது கணவர் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் எனவும் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் டயனா கமகேவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -