Home Srilanka மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் இரத்து!

மேல் மாகாணத்தில் புகையிரத சேவைகள் இரத்து!

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் மேல்மாகாணத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினால் நாளையும், ஞாயிற்றுக்கிழமையும் புகையிரத சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளை புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என இலங்கை புகையிரத நிலைய அதிபர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாளை தொடக்கம் மூன்று நாட்களுக்கு மேல்மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுப்படுத்தப்படுவதனால் நாளையும் (30), ஞாயிற்றுக்கிழமை நவம்பர் மாதம் 1 ஆம் திகதியும்,

றம்புக்கனை – கொழும்பு கோட்டை, பெலியத்தை ,காலி ,அளுத்கமை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களில் இருந்து மருதானை நோக்கி புறப்படும் புகையிரதம், அவிசாவளை – கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும் புகையிரத சேவைகள் இரண்டு நாட்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளன.

நாளை மறுதினம் (31) கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது. பரீட்சைக்காக ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு அமைய புகையிரத சேவை இடம் பெறும்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -