மொரட்டுவ, கல்தெமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
02 ரிவோல்வர், 10 ரவைகள் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த வீட்டில் வசித்த நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.