கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு (சிசிடி) அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மினுவாங்கொடை கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணையை சிசிடியில் இருந்து மாற்றுமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இதன்படி வேறு பிரிவுகளில் இருந்து விசாரணை குழுவை நியமிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.