Home International வியட்நாமில் இயற்கை அனர்த்தத்தில் சிக்கி 25 பேர் பலி- 40 பேர் மாயம்!

வியட்நாமில் இயற்கை அனர்த்தத்தில் சிக்கி 25 பேர் பலி- 40 பேர் மாயம்!

வியட்நாமின் மத்திய மாகாணமான குவாங் நாமில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 13 பேரும், கடலில் படகுகள் மூழ்கியதில் மீனவர்கள் 12 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்தோடு, மண்சரிவில் சிக்கி 40 பேர் காணாமல் போயுள்ளனர்.

வியட்நாமில் சக்தி வாய்ந்த மொலேவ் சூறாவளி தாக்கியதை தொடர்ந்து பெய்த மழையால் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்நாட்டு பிரதமர் இராணுவம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளிடையே கோரிக்கை விடுத்துள்ளார்.

குயின்டா என்று அழைக்கப்படும் மொலேவ் சூறாவளியால் மில்லியன் கணக்கான மக்களுக்கான மின்சார பாவனை துண்டிக்கப்பட்டதோடு 56,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை மண்சரிவை ஏற்படுத்திய பின் மொலேவ் சூறாவளி மந்தநிலைக்கு பலவீனமடைந்துள்ளது. பின்னர் இன்று வியாழக்கிழமை குறித்த சூறாவளி லாவோஸை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வியட்நாமின் சில பகுதிகளில் சனிக்கிழமை வரை 700 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்யும் என வியட்நாமின் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.4 27f0a170c1044c4a834213665c43ed36

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -