Home Srilanka 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு ஆளும் கட்சி பக்கம் ஆசனம்?

20ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு ஆளும் கட்சி பக்கம் ஆசனம்?

20ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆளும் கட்சியின் பக்கம் ஆசன ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியல்ல அதிகாரபூர்வமாக கடிதம் ஊடாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்ற அமர்வுகளின் போது 20ஆம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை ஆளும் கட்சியின் பக்கம் அமர்ந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

டயனா கமகே, அரவிந்த குமார், இஷாக் ரஹ்மான், பைசல் காசீம், மொஹமட் ஹாரீஸ், எச்.எம்.எம். தொளபீக், நசீட் அஹமட், எம். ரஹீம், எஸ்.எம்.எம். முஸாரப் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இவ்வாறு ஆளும் கட்சியின் ஆசன வரிசையில் அமர்த்திக் கொள்ளுமாறு சபாநாயகரிடம், லக்ஸ்மன் கிரியல்ல கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து இந்த உறுப்பினர்களை நீக்குவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -