Home Srilanka PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

PCR பரிசோதனை தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டுள்ள தகவல்!

கொரோனா பரவல்கள் ஏற்படும் இடங்கள் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலும் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களுக்கு அருகிலும் பரவலாக PCR பரிசோதனைகள் மேற்கொள்வது கட்டாயமாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் கொரோனா நோயாளர்கள் அதிகரிப்பதன் காரணத்தை விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் அவ்வாறு ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது.

கொழும்பு நகர எல்லையில் தொடர்ந்தும் பரவலான மட்டத்தில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் எதிர்பாராத விதமாக பேலியகொட மீன் சந்தையிலும் மினுவாங்கொடையிலும் கொரோனா பரவல் ஏற்பட்டது.

பொருட்கள் பகிரும் வலயமைப்பு மூலம் வைரஸ் பிரதேச ரீதியான பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரதும் ஆதரவு அவசியமாகும்.

சுகாதார பரிந்துரைகளை முடிந்தளவு பின்பற்றுவது அனைத்து நபர்களினதும் சமூக பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -