HomeBreaking Newsஇரண்டு நாடுகளை உலுக்கிய சக்தி வாய்ந்த பூகம்பம்- சுக்கு நூறாய் சரிந்து கிடக்கும் கட்டிடங்கள்; கலங்க...

இரண்டு நாடுகளை உலுக்கிய சக்தி வாய்ந்த பூகம்பம்- சுக்கு நூறாய் சரிந்து கிடக்கும் கட்டிடங்கள்; கலங்க வைக்கும் வீடியோ காட்சி!

துருக்கியின் ஏஜியன் கடற்கரை, கிரீஸ் தீவான சமோஸின் வடக்கே சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் மேற்கு இஸ்மிர் மாகாணத்தின் கரையிலிருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் மற்றும் துருக்கி நகரமான இஸ்தான்புல் வரை உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) தெரிவித்துள்ளது.

கிரீஸ் தீவான கிரீட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை, ஆனால் துருக்கிய நகரமான இஸ்மிரில் கட்டிடங்கள் சுக்கு நூறாக இடிந்து விழுந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மக்கள் தேடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ஆனால், வீடியோவின் உண்மை தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

 

816

68769

123140080 2855726371316194 644421547093863573 n

EllE8XiXUAMfruX

EllJ5fGX0AMKwXa

EllNM5 VcAAPtoc

EllNT rVkAAZTpy

EllRau4XEAIrcIT

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -