இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 140பேர் குறித்த தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக அவ்வமைச்சு கூறியுள்ளது.
இதற்கமைய நாட்டில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4282 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் நேற்று மட்டும் 600 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 800 ஆகப் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 19பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.