குருநாகலில் உள்ள அனைத்து கடைகளையும் வணிக நிலையங்களையும் மூடுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
குருநாகல் நகர எல்லைக்குள் அதிக எண்ணிக்கையிலான கொரோனா நோயாளிகள் இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குருநாகலில் உள்ள வில்கொட பகுதியை முற்றிலுமாக தனிமைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவானோர் ஏனையோரை சந்திக்காமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.