HomeIndiaமுகக்கவசத்தை கொரோனா தடுப்பூசியாக மக்கள் கருத வேண்டும்- சுகாதாரஅமைச்சு!

முகக்கவசத்தை கொரோனா தடுப்பூசியாக மக்கள் கருத வேண்டும்- சுகாதாரஅமைச்சு!

முகக்கவசத்தை கொரோனா தடுப்பூசியாக டெல்லி மக்கள் கருத வேண்டுமென சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சத்யேந்தர் ஜெயின் மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நோயாளிகளை விரைவாகக் கண்டறிதல், பரிசோதனை போன்ற தீவிர நடவடிக்கையால் டெல்லியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெல்லியிலுள்ள மருத்துவமனைகளில் தற்போது, 35 சதவீத படுக்கை வசதிகள் நிரம்பியுள்ளன. தீவிர நடவடிக்கையால் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசத்தையே தடுப்பூசியாகக் கருத வேண்டும்.

நீங்கள் முகக்கவசம் அணிந்தால், உங்களை காற்று மாசில் இருந்தும் கொரோனா தொற்றில் இருந்தும் அது காக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -