Home Srilanka அரசாங்க தகவல்கள் திணைக்களம் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நான்கு பேருக்கு கொரோனா!

அரசாங்க தகவல்கள் திணைக்களம் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நான்கு பேருக்கு கொரோனா!

அரசாங்க தகவல் திணைக்களத்தின் இரண்டு ஊழியர்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்த கொரோனா தொற்றாளர்களில் ஒருவர் ஊடகத்துறை அமைச்சின் நிறைவேற்று தர அதிகாரிகளில் ஒருவர் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் பணிகளுக்கு எந்த தடையும் ஏற்படாது எனவும் களுவெவ குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் 10,561 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், 4,399 பேர் சிகிச்சைகளின் பின்னர் வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதுடன், நாட்டில் கொரோனா தொற்றினால் 20 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -