இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் நேற்று இலங்கையை வந்தடைந்தார். சீனத் தூதரகம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குய் சென்ஹொங் என்பவரே இலங்கைக்கு செயற்படவுள்ள சீனாவின் புதிய தூதுவராவார்.
இந்தநிலையில் 2 வாரங்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின்னரே அவர் தமது கடமைகளை பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சீனத் தூதுவர் சீனாவின் முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகராக செயற்பட்டவர் என்று சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.