Home Srilanka கடன் மற்றும் வட்டியை செலுத்த மீண்டும் கடன் பெறும் இலங்கை!

கடன் மற்றும் வட்டியை செலுத்த மீண்டும் கடன் பெறும் இலங்கை!

கடன் மற்றும் வட்டியை செலுத்தவும், அத்தியாவசிய செலவுகளை பூர்த்தி செய்யவும் இந்த ஆண்டின் எஞ்சியுள்ள காலப் பகுதிக்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்காகவும் அரசாங்கம் 71 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது.

இதில் 30 ஆயிரம் கோடி ரூபாயை வெளிநாட்டு கடனாகவும் எஞ்சியுள்ள தொகையை உள்நாட்டு கடனாகவும் பெற்றுக் கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டு கடன்களை பெற்றுக்கொள்ளும் போது, இலங்கை அபிவிருத்தி பிணை முறி, அந்நிய செலாவணி தற்கால நிதி வசதிகள் மற்றும் முதலீட்டு திட்டங்களுக்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் உள்நாட்டு கடன்கள் திறைசேரி பத்திரங்கள் மற்றும் ஏனைய வழிமுறைகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளன.

ஒக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையான காலத்திற்கு இந்த கடன் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -