Home Srilanka கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் மூடல்-10 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா உறுதி!

கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் மூடல்-10 உத்தியோகத்தர்களுக்கு கொரோனா உறுதி!

கொழும்பு கடலோரப் பொலிஸ் நிலையம் கொரோனா அச்சம் காரணமாக இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது.

குறித்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 10 உத்தியோகத்தர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 80 பேர் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடலோரப் பொலிஸ் நிலையச் செயற்பாடுகள் தற்காலிகமாக கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் பல பிரசேதங்கள் முடக்கப்பட்டிருக்கின்ற நிலையில் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -