கொரோனா காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்று சினிமா துறை. அதிலும் தியேட்டர்கள் அதைவிட பெரிதும் பாதிக்கப்பட்ட பல நஷ்டங்களை சந்தித்துள்ளது.
சென்ற மாதம் தியேட்டர்கள் திறக்கப்படும் என எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில் தமிழக அரசு அதனை மறுத்துவிட்டது.
நவம்பர் மாதமாவது தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதிக்குமா என திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.வரும் நவம்பர் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.
அரசு அறிவித்துள்ள இந்த தளர்வுகளின் கீழ், தீபாவளிக்கு ஓரிரு படங்கள் வெளிவரும் என்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.