கர்ப்பிணித் தாய்மார்கள் அல்லது குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை,இலங்கை முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் ஐரோப்பாவைச் சேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது
மினுவாங்கொட மற்றும் பேலியகொட உள்ளிட்ட பல பகுதிகளில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வகை ஐரோப்பாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் வகை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில்,இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.