Home Srilanka பி.சி.ஆர்.கருவி திருத்தத்திற்காக வருகை தந்தது சீன குழு!

பி.சி.ஆர்.கருவி திருத்தத்திற்காக வருகை தந்தது சீன குழு!

இலங்கையில் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகின்ற பி.சி.ஆர்.இயந்திரத்தை திருத்துவதற்காக சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.

குறித்த குழு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு வந்து சேர்ந்துள்ளனர் என்பதை நாங்கள் அறிகின்றோம் என இலங்கைக்கான சீன தூதரகம் தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது பழுதடைந்த நிலையில் காணப்படுகின்ற பி.சி.ஆர்.இயந்திரத்தை தயாரித்துள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த இயந்திரம், பழுதடைந்தமைக்காக காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பி.சி.ஆர்.இயந்திரங்கள் சில பழுதடைந்துள்ளமையினால் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -