Home Lifestyle மடாகஸ்கரில் மீண்டும் தென்பட்ட அரியவகை பச்சோந்தி!

மடாகஸ்கரில் மீண்டும் தென்பட்ட அரியவகை பச்சோந்தி!

மடாகஸ்கர் நாட்டில் 100 ஆண்டுகளுக்கு பிறகு அரியவகை பச்சோந்தி இனத்தை கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனி நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.1604119599126094

ஆப்ரிக்காவின் மடாகஸ்கர் நாட்டின் வடமேற்கு பகுதியில் கடந்த 2018 – ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அரிய வகை வோல்ட்ஸ்கோவ் ரக பச்சோந்தியை கண்டுபிடித்துள்ளனர். ஆனாலும், நேற்றுதான் இது குறித்த முறையான அறிவிப்பு மற்றும் காணோலிகளை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர். இந்த பச்சோந்தி 1913 – ஆம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக மனிதர்களின் கண்களுக்கு தென்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பச்சோந்தியை கண்டுபிடித்த குழுவின் தலைவரும் யூனிச் நகரத்தை சேர்ந்த விலங்கின ஆராய்ச்சியாளருமான பிராங் கிளாவ் ”ஆண் பச்சோந்திகள் பொதுவாக பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. பெண் பச்சோந்திகள் நீல, சிவப்பு, ஊதா மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான வண்ணங்களுடன் அழகாக உள்ளன. பெண் பச்சோந்திகள் ‘தங்கள் மனநிலைக்கு ஏற்ற வகையில் நிறத்தை நேரத்துக்கு நேரம் மாற்றிக் கொள்கின்றன . பெண் பச்சோந்திகளின் பக்கவாட்டில் சிவப்பு புள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வோன்றுக்கும் ஏற்றபடி தனித்தனியாக மாறுபடுகிறது” எனறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ரக பச்சோந்திகள் குறுகிய வாழ்நாளை கொண்டவை. மழை காலத்தில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கின்றன. குறுகிய காலத்திலேயே வளர்ந்து, இணையை கவர்ந்து , இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு சில மாதங்களிலேயே உயிரையும் இழந்து விடுகின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

காடுகள் அழிப்பால் இந்த வகை பச்சோந்திகள் காணாமலேயே போய் விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -