மேல் மாகாணத்தில் இருந்து கடந்த 29 ம் திகதி வெளியேறிய 454பேர் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது தங்கியிருக்கும் இடங்களிலேயே சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றை இன்று நடத்திய அவர், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிச்சென்றவர்கள் பண்டாரவளை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம், தங்காலை மற்றும் நுவரெலிய பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
மேலும் சிலரை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 29ம் திகதி மேல் மாகாணத்தில அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு சட்டம் நவம்பர் 2 வரை அமுலில் இருக்கும்
இந்தநிலையில் ஊரடங்குக்கு முன்னர் மேல்மாகாணத்தில் இருந்து ஏனைய மாகாணங்களுக்கு செல்வோரால் ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா ஆபத்து உள்ளது என்பதால் செல்லவேண்டாம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனினும் இதனையும் மீறிச்சென்றோரே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.