HomeSpiritual2020-2021வரை 12 ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்!

2020-2021வரை 12 ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்!

122705666 702325744025251 5809705936742381933 nமேஷம்:

மேஷ ராசிக்கு இதுவரை ஒன்பதாமிடத்தில் இருந்து வந்த குரு தற்போது பத்தாம் இடத்திற்கு மாறுகிறார். நமது மூலநூல்களில் ஒன்பதாமிடம் குருவுக்கு சிறப்பான இடமாகவும், பத்தாம் இடம் கேந்திர வீடு என்பதால் சுமாரான இடமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தக் குருப்பெயர்ச்சி ஒருவகையில் வித்தியாசமானதுதான். உங்களுக்கு சகலத்தையும் தரும் யோகரான குரு, பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அடையும் பலவீன நிலையான நீச்சத்தை இம்முறை அடைகிறார். ஆனால் வேத ஜோதிடம் இந்நிலைக்கு விதிவிலக்காக சொல்லும் நீச்சன் இருக்கும் வீட்டு அதிபதி ஆட்சி பெற்றால் நீச்ச பங்கம் எனும் இழந்த வலுவை திரும்பப் பெறும் நிலையை அடைகிறார்.

எனவே இந்த குருப்பெயர்ச்சி உங்கள் வேலை, வியாபாரம், தொழில் போன்றவைகளில் சில நிலைகளில் தேக்கம், தடைகளை ஏற்படுத்தினாலும், ஏற்கனவே பத்தாமிடத்தில் ஆட்சி நிலையில் இருக்கும் தொழில் ஸ்தானாதிபதி சனியை குரு தனது இணைவால் சுபத்துவப்படுத்தப் போவதால் உங்களுக்கு தொழிலில் லாபமும் பணவரவும் இருக்கும். முக்கியமாக குருவே உங்கள் பாக்கியாதிபதி என்பதால் ஒன்பதுக்குடையவன் பத்தில் அமரும் நிலை நிச்சயமாக உங்களுக்கு கெடுபலன்கள் இருக்காது.

ஒன்பது, பத்துக்குடையவர்கள் இணைவு மேஷத்திற்கு மிகுந்த நன்மைகளை தரக் கூடிய ஒரு நிகழ்வாகும். ஆகவே இந்தக் குருப்பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் இருக்கும். எனவே இதுவரை அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு இருந்து வந்த சங்கடங்கள் நீங்கி எல்லாவற்றிலும் சந்தோஷம் கிடைக்கும் ஒரு காலம் ஆரம்பமாக இருக்கிறது.

2021 ம் ஆண்டு மேஷ ராசியினர் உழைப்பை நம்ப வேண்டிய காலமாக இருக்கும். உழைப்பும் முயற்சியும் உங்களுக்கு வெற்றியைத் தரும் என்பதால், உண்மையாக கடுமையாக உழைத்தால் வெற்றி கிடைக்கும். நீங்கள் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால் உங்களால் எதுவும் செய்ய முடியும் என்பதும் நிஜம்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு சாதகமாக திரும்பி நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு பொருளாதார நிலைமைகள் இப்போது முன்னேற்றமாக இருக்கும். மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகை இப்போது கைக்கு வரும்.

சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக் கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம் இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

குரு தான் இருக்கும் வீட்டை விட, பார்க்கும் வீட்டையே பலப்படுத்தி நன்மைகளைத் தருவார் என்பது ஜோதிட விதி. அதன்படி பத்தில் அமரும் குரு தனது புனிதப் பார்வையால் இரண்டு, நான்கு, ஆறு ஆகிய இடங்களைப் பார்த்து பலப்படுத்துவார் என்பதால் மேற்கண்ட பாவங்களின் தன்மைகள் வலுப் பெறும் .

குருவின் பார்வை இரண்டாமிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் விழுவதால் குடும்பத்தில் சந்தோஷமும், மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தன காரகனான குரு தன ஸ்தானத்தை பார்ப்பதால் அந்த பாவம் வலுப் பெறுகிறது. இதனால் தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது.

குருவின் நான்காமிடப் பார்வையால் நீண்ட நாட்களாக வீடு கட்ட வேண்டும் அல்லது வீடு வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தவர்களுக்கு எல்லா அமைப்புகளும் கூடி வந்து உங்களின் வீட்டுக்கனவு நனவாகும். ஆனாலும் சனி குரு இணைந்திருப்பதால் பெரும்பாலானவர்கள் லோன் போட்டுத்தான் வீடு கட்டவோ, வாங்கவோ செய்வீர்கள். இந்தக் குருப் பெயர்ச்சி உங்களை கடன்காரராக்கி அதன் மூலம் ஒரு சொத்து சேர்க்க வைக்கும்.

அம்மா வழி உறவினர்களுடன் சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார் வழி சொத்துகள் தற்போது கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு.

குரு நான்காமிடத்தை பார்க்கப் போவதால் மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். தெரிந்த கேள்விதான் கேட்பார்கள் என்பதால் பரீட்சை எழுதுவற்கு சுலபமாக இருக்கும். அல்லது படிக்காமலேயே பாஸ் ஆகிவிடுவீர்கள். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

குருவின் பார்வை ஆறாமிடத்தில் பதிவதால் தொழில் விரிவாக்கத்திற்காகவோ அல்லது குடும்பத்தில் நடக்க இருக்கும் சுப காரியங்களுக்காகவோ கடன் வாங்க நேரிடும். ஏற்கனவே இருக்கும் கடனை அடைக்க புதிய கடன் வாங்குவீர்கள். ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் ஏற்படலாம். எந்த சூழ்நிலையிலும் மீட்டர் வட்டி போன்ற கந்து வட்டி வாங்க வேண்டாம். பின்னால் சிக்கல்கள் வரும்.

மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச் செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு வீடு மாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும்.

உங்களின் கவனக்குறைவான செயல்களால் மறைமுக எதிரிகள் உருவாகக் கூடும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு இருப்பதால் அனைத்திலும் கவனமாக இருங்கள். உறவினர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்கள், சிறு சண்டைகள் வரலாம்.

நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும். பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

சனி சுபத்துவமாகி நல்ல அமைப்பில் இருப்பதால் உங்களில் சிலருக்கு அதிக முயற்சி இல்லாமலேயே தொழில் முயற்சிகளில் லாபங்கள் கிடைக்கும். கமிஷன், தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல தொகை ஒரேநேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர, சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

குருவின் நீச்ச பங்க வலுவால் எந்த ஒரு காரியத்தையும் சாதித்தே ஆகவேண்டும் என்றும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடனும் நிறைவேற்றிக் காட்டுவீர்கள். உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப்போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

அதிகமான அலைச்சல்களாலும் வேலைப்பளுவாலும் உடல்நலம் பாதிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறுகள் இப்போது வரலாம்.

வயதானவர்கள் உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை வைக்க வேண்டும். இந்த வருடம் உங்களுக்கு மறதியும், யாருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்வதாக வாக்குக் கொடுத்தோம் என்பதும் மறந்து போய், வேறு எதையாவது செய்து அதனால் பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. யூகவணிகம், பங்குச்சந்தை, ரேஸ், லாட்டரி போன்றவைகளில் ஈடுபாடு காட்டாமல் இருப்பது நல்லது. இந்த குருப் பெயர்ச்சியால் மேற்படி இனங்களில் வருமானம் வராமல் விரயங்களும் நஷ்டங்களும்தான் இருக்கும்.

குரு பத்தில் அமர்வதால் யாருக்காவது பரிதாபப்பட்டு உதவி செய்து அதனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் அமைப்பு இருப்பதால் யாருக்கும் எதற்காகவும் ஜாமீன் போட வேண்டாம். யாருக்கும் எதுவும் செய்து தருவதாக தேவையில்லாத வாக்குறுதி கொடுக்க வேண்டாம். மொத்தத்தில் நல்லபலன்கள் அதிகம் உள்ள பெயர்ச்சியாக இது இருக்கும்.

பரிகாரங்கள்:

குரு நீச்சபங்க நிலையில் இருப்பதால் அருகில் இருக்கும் பழமையான ஈஸ்வரன் கோவிலில் வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்யலாம். வியாழக்கிழமை குரு ஹோரையில் குருவை நிகர்த்த பெரியோர்களை சாஷ்டாங்கமாக வணங்கி ஆசி பெறுங்கள்.

123140708 702325804025245 5455736077871366204 nரிஷபம்:
ரிஷப ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் நன்மைகளைத் தராத அமைப்பில் இருந்த குரு, தற்போது பாக்கியஸ்தானம் எனப்படும் ஒன்பதாம் இடத்திற்கு மாறி உங்கள் ராசியைப் பார்க்கப் போகிறார். இது ஒரு மிகவும் சிறப்பான நிலை. இந்த பெயர்ச்சியினால் ரிஷபத்திற்கு மிகுந்த நன்மைகளும், மேன்மைகளும் இருக்கும்.

குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கும் காலம் ஒரு மனிதனின் அதிர்ஷ்டம் செயல்படும் காலம் என்பதால் இன்னும் ஒரு வருட காலத்திற்கு நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் நல்ல விதமாக நிறைவேறும் காலம் இது என்றுகூடச் சொல்லலாம்.

அதிலும் உங்களின் எதிரி கிரகமான குரு நீச்சம் எனும் பலவீன நிலையை அடைந்து அதன்பிறகு உங்களின் யோகாதிபதியான சனியின் இணைவால் நீச்ச பங்கத்தை அடைவது ரிஷபத்திற்கு முன்னேற்றம் தரும் கிரக அமைப்பு என்பதால் பிறக்க இருக்கும் 2021 ம் ஆண்டு உங்களுக்கு நன்மையைத் தரும் வருடமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் ரிஷப ராசியைச் சேர்ந்த நடுத்தர வயதினருக்கு மிகவும் மேன்மையான ஒரு காலமாக இருக்கும். இளைய பருவத்தினருக்கு இந்த காலகட்டத்தில் படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளில் நல்ல பலன்கள் நடைபெறும்.

முக்கியமான ஒரு பலனாக இதுவரை இருந்த மந்த நிலைமைகள் மாறி சுறுசுறுப்பான வாழ்க்கைக்குத் திரும்புவீர்கள். வாழ்க்கை இனி அதிர்ஷ்டகரமாக அமையும். பெரும்பாலான கிரகங்கள் இப்போது நன்மை தரும் இடத்தில் உள்ளதால் எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது. உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

குருபார்வை ராசிக்கும், உங்கள் ராசியில் உள்ள ராகுவிற்கும் கிடைப்பதால் இந்த குருப் பெயர்ச்சிக்குப் பிறகு புதிய மனிதரைப் போல உணருவீர்கள். உங்களின் அந்தஸ்து, மதிப்பு அனைத்தும் உயரும் நேரம் இது. அடுத்தவர்களால் கௌரவமாக நடத்தப் படுவீர்கள். தொட்டது துலங்கும். நினைத்தது நடக்கும். பிறந்த ஜாதகத்தில் நல்ல யோக தசா புக்திகள் நடந்து கொண்டு இருந்தால் நான் சொல்வதை விட கூடுதல் பலன்கள் உண்டு.

இதுவரை வேலை, வியாபாரம், தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்து வந்த போட்டிகளும், எதிர்ப்புகளும், பொறாமைகளும், தடைகளும் விலகி அனைத்தும் உங்களுக்கு நன்மை தரும். பணிபுரியும் இடங்களில் இதுவரை இருந்து வந்த நிம்மதியற்ற சூழல் இனிமேல் இருக்காது.

நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

இளைய பருவத்தினருக்கு ஏமாற்றமும், மன அழுத்தமும் இருக்காது. இந்தக் குருப் பெயர்ச்சி உங்களுக்கு யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த குழப்பங்களையும், காரியத் தடைகளையும், துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

இனிமேல் ரிஷபத்தினருக்கு ஐ.ஏ.எஸ், மற்றும் குரூப் ஒன் மற்றும் வங்கி சம்பந்தப்பட்ட போன்ற தேர்வுகளில் வெற்றி உண்டு. ஏற்கனவே தேர்வுகள் எழுதி முடிவுகளுக்கு காத்து இருப்பவர்களுக்கும் நல்ல செய்தி கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் தடையின்றி நடக்கும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவி தேடி வரும்.

அலுவலகத்தில் புரமோஷன் கிடைக்காதவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பள உயர்வு கிடைக்கும். உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

பண விஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் சிறிதளவு முயற்சி, பெரிதளவு அதிர்ஷ்டம், அதனால் நல்ல மேம்பாடான நிலை ஆகியவற்றை கண்கூடாக காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள், திட்டங்கள், கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப் போகும் காலம் இது. உங்களின் உடல்நிலையும் மனநிலையும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

சுயதொழில் செய்பவர்களுக்கு தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் வெற்றி காண்பார்கள். எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும். தொழிலை விரிவாக்கம் செய்யவோ புதிய கிளைகள் ஆரம்பிக்கவோ இது நல்ல நேரம்.

வேலையில் இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் மாறும். பழைய வேலையை விட நல்ல வேலை கிடைக்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள். இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும்.

முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனி முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும். திருமணம் தள்ளிப்போய் இருந்தவர்களுக்கு வரன்கள் நிச்சயிக்கப் பட்டு சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும்.

குழந்தை பாக்கியம் தாமதமானவர்களின் வீட்டில் சிறு குழந்தைகளின் அழுகைக் குரலும், மழலைச் சத்தமும் கேட்டு தாத்தா, பாட்டிகளின் மனம் குளிரப் போகிறது. கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு நல்லபடியாக ஒரு முடிவு வரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

இந்தப் பெயர்ச்சியின் மூலம் குரு, தனது யோகமான பார்வையால் உங்களின் ராசி மற்றும் மூன்று, ஐந்தாமிடங்களைப் பார்த்து புனிதப்படுத்துவதால் அந்த பாவகங்களின் தன்மைகள் வலுப் பெறுகின்றன.

குருவின் மூன்றாமிடத்துப் பார்வையால் உங்களின் விடாமுயற்சியும் தைரியமும் மேலோங்கி அனைத்துப் பிரச்னைகளையும் நீங்கள் ஒருவராகவே சமாளித்து தீர்க்கும் அளவிற்கு ஆற்றல் பெறுவீர்கள். மூன்றாமிடம் சகாயஸ்தானம் என்பதால் எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும்.

குருவின் ஐந்தாமிடப் பார்வையால் பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குல தெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும்.

பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். பிள்ளைகளுக்கான கடமைகளை பெற்றோர்கள் சரியாகச் செய்ய முடியும். தெய்வ தரிசனம் கிடைக்கும். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வட மாநில புனிதயாத்திரை போக முடியும். ஞானிகள் அருள் புரியும் இடங்களுக்குச் சென்று அருள் பெற முடியும். ஆலயப் பணிகளில் ஈடுபாடு வரும். திருக் கோயில்களைச் சுற்றித் தொழில்புரிபவர்கள் மேன்மை அடைவீர்கள்.

இழுபறியில் இருந்து வந்த பேச்சுவார்த்தைகள், நடவடிக்கைகள் சாதகமாகும். வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். பொருளாதார சிக்கல்கள் தீரும். பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும்.

கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்பு முனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும். வெளிநாட்டுப் பயணத்திற்கு தடைகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். தந்தையின் ஆதரவு பூரணமாய்க் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

ரிஷப ராசிப் பெண்களுக்கு என்று தனியாக எதுவும் சொல்லத் தேவையில்லை. கணவர் மற்றும் பிள்ளைகளின் நலன் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கும் ஆளாக இருப்பீர்கள் நீங்கள். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சுயநலம் போலத் தெரியும். பொறுப்புள்ள குடும்பத்தலைவி இருக்கும் குடும்பத்தில் சிக்கல்களுக்கு இடமில்லை. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக் குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள். ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி விடியலைத் தந்து வழியையும் காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

பரிகாரங்கள்:

குருபகவானால் கிடைக்க இருக்கும் நன்மைகளை அதிகப் படுத்திக் கொள்ளவும், அவரது திருவருளை முழுமையாகப் பெறவும் உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமையன்று குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் முன் கூட்டியே கேட்டு அதன்படி உணவிட்டு அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

 

122796998 702325867358572 4937657257026410906 n

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போதைய குருப்பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்தில் இருந்து எட்டாமிடத்திற்கு மாறுகிறார்.

அஷ்டம குரு என்று சொல்லப்படும் எட்டாமிடம் நல்ல பலன்களை தருவதில்லை என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டாலும் பாபக் கிரகங்கள் எட்டாமிடத்தில் தரும் கெடுபலன்களைப் போல சுப கிரகங்கள் ஒருபோதும் தருவதில்லை.

அதைவிட மேலாக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக உங்கள் ராசியிலேயே ராகு இருந்ததால், ராசி இருளடைந்து மிதுன ராசியினர் வயதுக்கேற்ற வகையில் மன அழுத்தத்தை அடைந்தீர்கள். குறிப்பாக உங்களில் பெரும்பாலானோருக்கு வாழ்க்கைத் துணை வழியில் நல்லவைகள் இல்லை.

தற்போதுதான் ராகு ராசியில் இருந்து விலகிய நிலையில் கடந்த சில மாதங்களாக உங்கள் ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து வருவதும், உங்களை பாடாய் படுத்துகிறது. இந்த இரண்டையும் நீக்கி நல்லவைகளை அருளும் ஒரு அமைப்பாக இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு அமையும்.

குறிப்பாக எட்டில் அஷ்டமச் சனியாக இருந்து உங்களுக்கு கடுமையான தொல்லைகளைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சனியுடன் குரு இணைந்து அவரை சுபத்துவமாக்கி, சனி தரும் கஷ்டங்களில் இருந்து அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவார் என்பதுதான் இந்தக் குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு தரும் ஒரு செய்தியாக இருக்கும். ஆகவே இந்த பெயர்ச்சியின் மூலம் சனி தரும் கடுமைகள் உங்களுக்கு நிச்சயமாகக் குறையும்.

குரு எட்டில் மாறினாலும், முதலில் நீச்ச நிலையை பெற்று ஏற்கனவே அங்கே இருக்கும் ஆட்சி பெற்ற சனியால் நீச்ச பங்க நிலையை அடைவதால் எட்டாம் இடத்தின் நல்ல பலன்களான, தூரத்தில் இருப்பதால் லாபம், வெளிநாடு, வெளிமாநில மேன்மை, திடீர் அதிர்ஷ்டம், அதிக முயற்சி இல்லாமலேயே பணம் கிடைத்தல் போன்ற நல்ல பலன்களை இனி மிதுனத்தினர் அடைவீர்கள்.

எந்த ஒரு ராசிக்கும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது. ஒரு மனிதனுக்கு நன்மைகளும், தீமைகளும் கலந்துதான் வர வேண்டும் என்பதன் அடிப்படையில், கடந்த சில மாதங்களாக சனி, ராகுவால் நல்ல விதமான கோட்சார நிலைகள் அமையாத மிதுனத்தினருக்கு இனிமேல் இது போன்ற துயரங்கள் வரப்போவதில்லை.

குறிப்பாக இதுவரை வாழ்க்கையில் செட்டில் ஆகாத இளைஞர்கள் இனிமேல் நிலை கொள்ள ஆரம்பிப்பீர்கள். கடந்த கால சோதனைகள் மீண்டும் வரவே வராது. எனவே எட்டில் இருக்கும் குரு கண்டிப்பாக உங்களுக்கு தொல்லைகளை தரப் போவதில்லை.

எட்டாம் இடம் என்பது மாறுதல்களை குறிக்கக்கூடிய ஒரு இடம் என்பதால் இதுவரை சாதகமற்ற நிலைகளில் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல விதமான மாற்றத்தை குரு கொடுத்தருள்வார். எந்த வகையில் பார்த்தாலும் இது மிதுன ராசிக்கு மாற்றங்களை மட்டும் கொடுத்து அதன்மூலம் முன்னேற்றங்களை தருகின்ற ஒரு சிறப்பு குருப்பெயர்ச்சியாக இருக்குமே தவிர ஒருபோதும் உங்களுக்கு கெடுதல்களை தரப் போவதில்லை.

குறிப்பாக சொல்லப் போவோமேயானால் இதுவரை செயல்படாத அதிர்ஷ்டம் இனிமேல் குருவின் தயவால் செயல்படப் போகும் காலம் இது. இதுவரை முயற்சி செய்தும் தோல்வி அடைந்த விஷயங்கள் இனி அதிக முயற்சி இன்றி அதிர்ஷ்டத்தின் துணையுடன் முழுமையாக வெற்றி அடையும். நல்ல விளைவுகளை நீங்கள் உணருவீர்கள்.

மிதுனத்தினருக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித், தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது புரியும்.

எனவே எதிர்காலத்தில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்ப கட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

குருவின் பார்வை பலம்தான் ஜோதிடத்தில் மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வளப்படுத்துபவர் குரு என்பதால் இம்முறை அவர் பார்க்கக்கூடிய 12, 2, 4 ஆகிய மூன்று பாவகங்களின் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை ஏற்படும்.

12-ஆமிடம் வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களைக் குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சிக்கு பிறகு தூர இடங்களில் வேலைக்கு செல்வதற்கு காத்துக் கொண்டிருந்தவர்கள் மற்றும் அதற்கான முயற்சிகளில் இருந்தவர்களுக்கு நன்மைகள் உண்டாகும். ஏற்கனவே வெளிநாடு, வெளிமாநிலத்தில் இருப்பவருக்கு நல்ல பலன்கள் உண்டு.

வெளிநாட்டில் இருந்தாலும் அங்கும் சரியான வேலை அமையாமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை கிடைக்க இருக்கிறது. ஏற்கனவே இருந்து வந்த வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்க போகிறது. உங்களைப் புரிந்து கொள்ளாமல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மேலதிகாரி இனி உங்களை புரிந்து கொண்டு சாதகமான வகையில் நடந்து கொள்வார் அல்லது அந்த அதிகாரி மாறுதல் ஆவார்.

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமாகிய இரண்டாம் இடத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதால் இதுவரை பொருளாதார பிரச்சினையில் சிக்கி இருந்தவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் இருந்தவர்கள், நிரந்தர வேலை இல்லாதவர்கள், மனதிற்கு பிடிக்காத தொழில் அமைப்புகளில் இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் மாற்றம் உண்டாகி நல்ல பலன்களும், பணவரவும் உண்டாகும்.

குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டை குரு நீச்ச பங்கமாகி பார்ப்பதால், இளைய பருவத்தினருக்கு இப்போது திருமணம் நடைபெறும். இதுவரை குடும்பம் அமையாமல் இருப்பவர்கள் குடும்பஸ்தனாக முடியும். எதிர்கால வாழ்க்கைத் துணையை இந்த குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களில் சிலர் அடையாளம் காண்பீர்கள்.

குருவின் இரண்டாம் வீட்டு பார்வையால் வாக்குப்பலிதம் உண்டாகும் என்பதால் ஒருவருக்குக் கொடுக்கும் வாக்குறுதியை உங்களால் காப்பாற்ற முடியும். இந்த அமைப்பின் மூலம் பணவரவு நிலையாகி சம்பளம் மூலமாகவோ, இதர வருமானம் மூலமாகவோ வருமானம் வந்து வீட்டுக்கடன், வாகனக்கடன் போன்றவற்றை சொன்ன தேதிக்கு கட்ட முடியும். எனவே இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் உங்களுக்கு கடன் தொல்லைகள் இருக்காது

குருவின் அதி உன்னத சுப பார்வை நான்காம் வீட்டில் படுவதால் இதுவரை வசதியற்ற வீட்டில் இருப்பவர்கள், வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீடு வாங்கவோ அல்லது குத்தகைக்கு செல்லவோ முடியும். சிலர் இதுவரை காற்றோட்டமில்லாத மிகச் சிறிய வீட்டில் கூண்டுக்குள் அடைபட்டு இருந்தது போன்ற நிலை மாறி நல்ல விசாலமான காற்றோட்டமான வீட்டிற்கு மாறுவீர்கள்.

உங்களில் சிலருக்கு சொந்த வீடு பாக்கியம் அமைகிறது. வங்கிக் கடன் பெற்று வீடு அமையும். வீடு வாங்குவது கனவாகவே இருந்தவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியின் மூலமாக நல்ல வீடு அமையும். சிலர் வீடு கட்ட ஆரம்பிப்பீர்கள். வாகன மாற்றம் உண்டு. செலவு வைத்துக் கொண்டிருந்த வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனம் வாங்கி ரிப்பேர் செலவு இல்லாமல் இருப்பீர்கள்.

பெண்களுக்கு இது மிகவும் நல்ல காலகட்டமாகும். கடந்த சில மாதங்களாக ராகு மற்றும் அஷ்டமச் சனியின் ஆதிக்கத்தினால் இழப்புகளையும், துயரங்களையும் மன அழுத்தங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு நல்ல மாற்றத்தை தந்து மனதை மிகவும் சந்தோஷமுடன் வைத்திருக்கும்..

வேலை செய்யும் பெண்கள் அலுவலகத்தில் நிம்மதியான சூழ்நிலையை உணர்வீர்கள். தொந்தரவு செய்து கொண்டிருந்த சிலரின் கை தாழ்ந்து உங்களுடைய கை ஓங்கும். வீட்டிலும் பணியிடங்களிலும் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்கள் வந்து ஒரு நிம்மதியான சூழலை பெண்கள் உணர்வீர்கள்.

அரசு ஊழியர்களுக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் நன்மைகள் உண்டு. குறிப்பாக அதிகாரமிக்க காவல்துறை மற்றும் நீதித் துறையில் இருப்பவர்களுக்கும், அமைச்சர்கள், நீதியரசர்கள், உயர் அதிகாரிகளின் அலுவலகங்களில் பணி புரிபவர்களுக்கும் நல்ல பலன்கள் நடக்கும். வெகுநாட்களாக எதிர்பார்க்கும் குடியுரிமை கிடைக்கும். தாய் தந்தையை பார்க்க தாய்நாடு வந்து திரும்பலாம்.

பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள், பொதுவாழ்வில் இருக்கும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு இது கூடுதல் நன்மைகளைத் தரும். அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். சினிமா, தொலைகாட்சி, பத்திரிகை போன்ற ஊடகத் துறையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மாறாக நன்மைகள் அதிகம் இருக்கும்.

மொத்தத்தில் எப்படிப் பார்த்தாலும் இந்த குருபெயர்ச்சி மிதுன ராசிக்கு நன்மைகளை தவிர தீமைகளைத் தராது.

பரிகாரங்கள்:

அஷ்டமச் சனி நடப்பதால் சனிக்கிழமை தோறும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் சரபேஸ்வரரை வழிபடுங்கள். சென்னையில் இருப்பவர்கள் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரரை தரிசித்து அருள்பெறலாம். தென் மாவட்டத்தவர்கள் நெல்லை கிருஷ்ணாபுரம் அபயஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் திருக்கோயிலில் ஜன்ம நட்சத்திரம் அன்று அர்ச்சனை ஆராதனைகளைச் செய்யுங்கள்.

122760331 702325957358563 6994286480145985441 nகடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு ஆறாமிடத்தில் இருந்து நல்ல இடம் என்று சொல்லப்படக்கூடிய ஏழாம் இடத்திற்கு குரு மாறுகிறார். எனவே கடக ராசிக்கு ஒரு மேன்மையைத் தரக்கூடிய காலம் ஆரம்பித்திருக்கிறது.

கடந்த காலங்களில் ஏழில் சனி, ஆறில் குரு எனும் அமைப்பால் கடக ராசிக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருபகவானும் நல்ல பலன்களை தர இயலாத நிலைமையில் இருந்தார். இந்த பெயர்ச்சியின் மூலம் குரு ஏழாமிடத்திற்கு வருவது நன்மைகளை தரக்கூடிய அமைப்பாகும்.

குருவின் நகர்வால் இதுவரை கடக ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் தாராளமாக கிடைக்கும். மேலும் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகளும் நல்லவிதமாக கைகொடுக்கும் நிலையில் இருந்தால் இம்முறை கடக ராசிக்காரர்களுக்கு இது தொட்டது துலங்குகின்ற ஒரு காலமாகவும் அமையும்.

இதுவரை எந்த விஷயத்தில் தடங்கல்கள் தடைகள் உங்களுக்கு இருந்து வந்ததோ அவை அனைத்தும் தீர்ந்து நல்லதொரு முன்னேற்றமான ஒரு காலத்தை கடக ராசியினர் இனி அடையப் போகிறீர்கள்.

குரு பகவான் தன்னுடைய பார்வையால் ராசியைப் பார்க்கும் காலம் அனைத்து மனிதர்களுக்கும் யோகம் தரக்கூடிய ஒரு அமைப்பாக வேத ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அதிலும் அவரது 9-ஆம் பார்வை மிகவும் விசேஷமானது என்கின்ற ஒரு நிலைமையில், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக உங்களின் முயற்சி ஸ்தானத்தை இன்னும் 13 மாத காலத்திற்கு குருபகவான் பார்க்கப் போவதால் கடக ராசிக்காரர்களின் முயற்சிகள் பலித்து அனைத்து விஷயங்களும் கிடைக்கும்.

ஏழாமிடத்தில் இருக்கும் குரு ராசியைப் பார்ப்பார் என்பதால் உங்களின் மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகம் பொலிவு பெறும். அனைத்து விஷயங்களையும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நன்கு செயல்படுவீர்கள். சிந்தனை செயல்திறன் நன்றாக இருக்கும் என்பதால் இம்முறை கடக ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் தங்களின் பக்கத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். எல்லா விதங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய ஒரு பெயர்ச்சி இது.

இந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நீச்ச நிலையில் சனியுடன் இணைந்துள்ள குரு ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

நீச்சபங்க குரு ஜீவன அமைப்புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்மைகளை மட்டுமே தரும்.

சுப கிரகமான குரு 7-ஆம் இடத்திற்கு மாறுகின்ற நிலையில், தன்னுடைய நன்மை தரும் பார்வையால் 11, 1, 3 ஆகிய இடங்களை பார்வையிடுவார். அவர் பார்வை பெறும் பதினொன்றாம் இடம் லாபஸ்தானம் என்பதால் பாலைவனத்தில் நடந்து செல்பவனுக்கு நடுவே ஒரு சோலை தெரிந்தார் போல கஷ்டங்களுக்கு மத்தியிலும் ஒரு சில பணவரவு மற்றும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும்.

இளைய பருவத்தினருக்கு குரு பலம் எனப்படும் திருமணத்தை நடத்தி வைக்க கூடிய ஏழாம் இடத்து குரு வந்திருப்பதால், தசா,புக்திகளின்படி தாம்பத்திய சுகம் கிடைக்க கூடிய அமைப்பில் இருப்பவர்களுக்கு தற்போது திருமணம் நடக்கும். அதேநேரத்தில் சனி, குரு இணைவால் திருமணத்தின் மூலமாக பலன்களை அனுபவிக்க முடியாதபடி சில சிக்கல்கள் இருக்கும்.

சிலர் திருமணமான உடனே வேலை நிமித்தமாக வெளிநாடு, வெளிமாநிலம் போன்ற இடங்களுக்கு கணவர், மனைவியை விட்டு பிரிந்து செல்ல வேண்டியிருக்கும். இதற்கு திருமணம் ஆகாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பு மனதுக்குள் ஓடும்.

சுப கிரகமான குரு ஏழாம் இடமான ஆட்சி வீட்டில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால், தொல்லைகளை சமாளிக்கக்கூடிய புத்துணர்வும், செயல்திறனும் உண்டாகும் எதையும் ஒரு எதிர்கால நோக்கோடு செயல்படுத்த முயற்சிப்பீர்கள். எதையும் தனி ஒருவராக போராடிப் போராடித்தான் செய்வீர்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ள மாட்டார்கள். உங்களைத் தேடி வந்து உதவிகளைச் செய்யவும் ஆள் இருக்காது.

குரு தனது 7-ம் பார்வையால் ராசியை பார்ப்பது இந்த பெயர்ச்சியின் மூலம் கிடைக்க இருக்கும் ஒரு அற்புதமான நிலை. இதன் மூலம் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த மனக் குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். கடந்த காலங்களில் வாழ்க்கைத் துணையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, பிரிவு முடிவுக்கு வரும். உங்கள் மனம் விரும்பும் தீர்வு இப்போது உண்டு. இதுவரை தாழ்வு மனப்பான்மையால் எதையும் முயற்சிக்காமல் இருந்தவர்கள் தற்போது தைரியமாக முயற்சி செய்வீர்கள்.

வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி, மீள முடியாமல் அவஸ்தைப்பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு வழி பிறக்கும். உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் குருப் பெயர்ச்சியாக இருக்கும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். கணவரும், குழந்தைகளும் சமர்த்தாக உங்கள் பேச்சை கேட்பார்கள். பிள்ளைகளைப் பற்றிய கவலை இனி இருக்காது.

இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும்.

சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு தங்க நகை சேமிக்க முடியும். முதல் திருமணம் முறிவடைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இப்போது இரண்டாவது திருமணம் நடக்கும். இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாகவும் அமையும்.

அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். ஏதேனும் ஒரு சிறு காரணத்திற்காக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும்.

பயணம் தொடர்பான விஷயங்களில் வருமானம் வரும். தொலைதூர பிரயாணங்களோ வெளிநாட்டு பயணங்களோ நடக்கும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் உண்டு.

தனியார்துறை மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். திடீரென நிர்வாகம் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபடவோ, அது சம்பந்தப்பட்ட கருவிகளைப் பொருத்தவோ, ஆட்களை நியமிக்கவோ வாய்ப்பு உள்ளது.

பரிகாரங்கள்:

கடகத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதம் இருப்பதும், வியாழன்தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று அவரை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும்.

vikatan 2019 06 6f3a6667 3e57 45c5 ab89 8e5ee740db7d 157991 thumb e1604113188544சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு தற்போது நற்பலன்களைத் தரும் இடமாக சொல்லப்படும் ஐந்தாம் இடத்தில் இருந்து, சாதகமற்ற பலன்களை தருவதாக சொல்லப்படும் ஆறாம் இடத்திற்கு குரு மாறுதல் அடைகிறார்.

பொதுவாக ஆறாம் இடம் என்பது கடன், நோய், எதிரிகளை குறிக்கும் இடம் என்பதாலும், சுப கிரகமான குரு ஆறாம் இடத்தில் அமரும் நிலையில் கடன், நோய் தொந்தரவுகளை வளர்ப்பார் என்ற முறையிலும் ஆறாம் இடம் குருவுக்கு ஏற்றதல்ல என்று சொல்லப்பட்டது. ஆனாலும் அனைத்து விதிகளும் விதி விலக்குகளுக்கு உட்பட்டது என்ற முறையில், எல்லா ராசிகளுக்கும் எல்லா விதிகளும் ஒரே பலனைத் தருவதில்லை.

தற்போது உங்களுக்கு நல்ல பலன்களைத் தனது கொண்டிருக்கும் சனியுடன், நீச்ச நிலையில் குரு இணைந்து சனியை சுபத்துவப் படுத்தப் போவதாலும், குரு உங்களுக்கு நன்மைகளைத் தரக்கூடிய யோகாதிபதி என்பதாலும் ஆறாமிடத்து கெடுபலன்களை கண்டிப்பாக குரு தரமாட்டார். அதேநேரம் இன்னும் கூடுதல் நற்பலன்களைத் தரும்படி சனியைத் தூண்டுவார்.

இருக்கும் இடத்தை விட, பார்க்கும் இடத்தை புனித படுத்துபவர் குரு என்ற விதிப்படி அவர் பார்க்கும் இடங்களான பத்து, பன்னிரெண்டு, மற்றும் இரண்டாம் இடங்கள் புனிதமடைகின்றன.

இதில் பத்தாமிடம் என்பது வேலை, தொழில் போன்றவைகளை குறிக்கின்ற ஒரு இடமாகும். எனவே இதுவரை சிம்ம ராசியில் பிறந்து நிம்மதியற்ற தொழிலில் இருப்பவர்களும், முன்னேற்றம் இல்லாத வேலையில் உள்ளவர்களும் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் வரும் நவம்பர் மாதத்திலிருந்து வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் முன்னேற்றங்களை காண்பீர்கள்.

தொழில் விஷயங்களில் விரிவாக்கங்கள், புதிய முயற்சிகள் போன்றவற்றை செய்வதற்கு யோசித்து, தயங்கி கொண்டிருந்தவர்கள் இனிமேல் தாராளமாக புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். படித்த படிப்பிற்கு ஏற்றார்போல வேலை கிடைக்காத இளைய பருவத்தினருக்கு மனதுக்கு ஏற்ற மாதிரியான வேலை வாய்ப்புகள் நிச்சயமாக உண்டு.

அடுத்து குரு ஆறாம் இடத்தில் இருந்து 12-ஆம் இடத்தைப் பார்ப்பது வீண் செலவுகளையும், விரயங்களையும் தருகின்ற ஒரு நிலை என்பதாலும் ஆறாம் இடத்தில் இருந்து அவர் பார்க்கிறார் என்பதாலும் செலவுகள் விஷயத்தில் இந்த வருடம் நீங்கள் கவனமுடன் இருந்தாக வேண்டி இருக்கும். 6-ஆம் இடம் என்பது கடன் தொந்தரவுகளை கொடுக்கக்கூடிய இடம்தான். இருப்பினும் கடன்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று சுபக்கடன் எனவும் அடுத்தது அசுபக்கடன் எனவும் சொல்லப்படக் கூடியது.

இங்கே கடன் வாங்காமல் எந்த மனிதரும் இருக்க முடியாது. கடன் வாங்கித்தான் தொழில் செய்கிறோம். தொழிலை விரிவாக்கம் செய்யவும் கடன் வாங்குகிறோம். கடன் வாங்காமல் எந்த ஒரு உயிரும் இருப்பதில்லை. அதேநேரத்தில் வாங்குகின்ற கடன் நல்லவழியில் செலவாகிறதா அல்லது கெட்ட வழியில் செலவாகிறதா என்பதுதான் நமக்குள்ள பிரச்சினையாக இருக்கும்.

குரு ஒரு இயற்கை சுப கிரகம் என்பதாலும், அவர் ஆறாமிடத்தில் நீச்ச பங்க நிலையில் ஆறாம் அதிபதியான சனியை சுபத்துவமாக்கி அவருடன் இணைந்திருப்பதாலும், இம்முறை சிம்ம ராசிக்காரர்களுக்கு சுபக் கடன்களை மட்டுமே தருவார் என்பது உறுதி. இதில் சுபக் கடன் என்பது வாழ்க்கைக்கு தேவையான நல்ல விஷயங்களான திருமணம், தொழில் அமைப்பு போன்றவர்களின் மட்டும்தான் இருக்கும்.

மருத்துவச் செலவு போன்ற தேவையில்லாத கடன்களை குரு ஒருபோதும் தருவதில்லை. ஆகவே ஆறாமிடத்தில் வருகின்ற குருவைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை.

அடுத்து குரு தன்னுடைய 7-ஆம் பார்வையால் 12-ஆம் இடத்தைப் பார்ப்பது விரயங்களையும் குறிக்கும் என்பதால், இம்முறை சிம்ம ராசியினர் வீட்டில் திருமணம், வீடு கட்டுதல் போன்ற சுப செலவினங்களும் அதற்கேற்றார்போல சுபக் கடன் வாங்கும் நிலையும் இருக்கும்.

இதுவரை வீடு இல்லாதவர்கள் கடன் வாங்கி வீடு கட்டவோ அல்லது ஹவுசிங் லோன் போட்டு, பிளாட் வாங்குவது போன்ற நற்பலன்கள் இருக்கும். சிலருக்கு வாகன கடன்கள் ஏற்படலாம். நல்லவைகளை வாங்கத் தூண்டும் கிரகமான குரு இம்முறை உங்களை நல்ல செலவு செய்ய வைப்பார்.

அடுத்து குரு தன்னுடைய 9ம் பார்வையால் இரண்டாம் இடமான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்க்கிறார். ஏற்கனவே சில சிம்ம ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை சற்று முன் பின்னாகத்தான் இருக்கிறது.

நினைத்த இடத்தில் பணம் கிடைக்காமல் சிலர் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வந்து கொண்டிருக்கின்ற வருமானத்திலும் சிலருக்கு துண்டு விழுந்திருக்கிறது. நிரந்தர வருமானம் இல்லாமல் சிலர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 100 ரூபாய் கிடைக்க வேண்டிய இடத்தில் 50 ரூபாய் கூட கிடைக்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் சிம்மத்தினர் அதிகம் பேர்.

இது போன்றவர்களுக்கு தன ஸ்தானத்திற்கு குரு பார்வை கிடைப்பதால் இந்த நவம்பர் மாத குருப்பெயர்ச்சிக்குப் பிறகு பொருளாதார நிலைமை நன்கு மேம்படும். தொழில் வேலை அமைப்புகளில் நல்ல லாபங்கள் கிடைக்கும்.

இரண்டாம் இடத்தைப் பார்க்கும் குருவால் இதுவரை திருமணம் ஆகாத சிலருக்கு குடும்பம் அமையும். 35 வயது தாண்டியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண், பெண்களுக்கு இது போன்று குடும்ப ஸ்தானத்திற்கு சுப கிரகமான குருவின் பார்வை கிடைக்கும் போதுதான் திருமண அமைப்பு கூடி வரும் என்பதால் இம்முறை திருமணத்திற்கு தாமதமானவர்களுக்கு கண்டிப்பாக திருமணம் நடைபெறும்.

உங்களில் நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை ரத்த அழுத்தம் போன்றவைகள் கண்டு பிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக் குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது. முடிந்தால் ஒரு முழு உடல் பரிசோதனை கூட செய்து கொள்ளலாம்.

நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து போவீர்கள்

சிலருக்கு வெளியூரிலோ, வெளிமாநிலத்திலோ, தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்ய கூடிய அமைப்புகள் உருவாகும். இருக்கும் இடத்தில் இருந்து தூர இடங்களுக்குச் செல்லும்படி இருக்கும். இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு மாற முயற்சி எடுத்துக் கொண்டிருப்பவர்கள் கவனத்துடன் செய்ய வேண்டும்.

குரு ஆறாமிடத்தில் வலுப் பெறுவதால் சில அத்தியாவசியத் தேவைகளுக்கு கடன் வாங்கியே ஆக வேண்டியது இருக்கும். எவ்வளவு பெரிய தலை போகிற பிரச்னையாக இருந்தாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். அதிக வட்டிக்கு வாங்கினால் அடுத்த வருட ஆரம்பத்தில் கடன் தொல்லையில் கொண்டு போய் விடும் என்பதால் எச்சரிக்கை தேவை.

இதுவரை தாமதமாகி வந்த வங்கிக் கடன் தற்போது உடனடியாக ஓகே செய்யப்படும். இதுவரை உங்களிடம் முகம் கொடுத்தும் பேசாத வங்கி அதிகாரி தற்போது உபசரித்து கடன் தருவார். ஆனால் அந்தக் கடனைக் கட்ட முடியாமல் சிக்கல்கள் வரும். எனவே கடன் வாங்குவதில் உஷாராக இருங்கள்

ஆடம்பரச் செலவுகளுக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. கிரெடிட்கார்டு உபயோகப் படுத்துவதில் கவனமாக இருப்பது நன்மையைத் தரும். யாரிடமும் தேவையற்ற வீண் வாக்குவாதம் வைத்துக் கொள்ள வேண்டாம். ஆறாமிடத்துக் குரு நல்ல நண்பர்களையும் சிறு பிரச்னைகளால் எதிரிகளாக மாற்றுவார் என்பதால் தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். யாரையும் நம்பி கையெழுத்து போடுவதோ எவருக்கும் ஜாமீன் கொடுப்பதோ கூடாது.

பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவு இருப்பதால் வரவுக்கேற்ப செலவு செய்வது நல்லது. வீண்விரயங்கள் ஏற்படும் காலம் இது என்பதால் செலவு செய்யும் முன் நன்கு யோசனை செய்து செலவு செய்யுங்கள். ஆடம்பர செலவுகளை தவிருங்கள். செலவுகளை குரு இழுத்து விடுவார் என்பதால் கையில் இருக்கும் சேமிப்பு பணத்தை நிலத்திலோ, வேறு வகையான விஷயத்திலோ முதலீடு செய்வது நல்லது.

பொதுவில் சிம்மத்திற்கு கெடுதல்கள் எதுவும் இல்லாமல் நற்பலன்களை மட்டுமே தரக்கூடிய குரு பெயர்ச்சி இது.

பரிகாரம்:

குருவின் நன்மைகளை கூடுதலாகப் பெற வியாழக்கிழமை தோறும் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவிலில் அருள்பாலிக்கும் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திப் பெருமானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் ஆடை சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்பான லட்டு நைவேத்தியம் செய்து, நெய் தீபம் ஏற்றி வாருங்கள். வயதில் மூத்தவர்கள் மனம் குளிரும் காரியங்களை செய்யுங்கள்.

123208407 702326124025213 7333917260911964904 o e1604113338975கன்னி:

கன்னி ராசிக்கு ஒரு மேன்மையான ஒரு காலகட்டத்தை தரக்கூடிய குருபெயர்ச்சி ஆரம்பித்திருக்கிறது.

கடந்த காலங்களில் உங்களுக்கு கோசார அமைப்புகளில் எந்த நல்ல பலன்களும் நடக்கவில்லை. குருவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாதகமற்ற இடங்கள் என்று சொல்லப்படக்கூடிய மூன்று மற்றும் நான்காம் இடங்களில் அமர்ந்து நல்ல பலன்களை தர இயலாத நிலைமையில் இருந்தார்.

இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் இதுவரை கன்னி ராசிக்காரர்களுக்கு எந்த விதமான பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் தடையின்றி கிடைக்கும். மேலும் பிறந்த ஜாதகப்படி தசாபுக்தி அமைப்புகளும் நல்லவிதமாக கைகொடுக்கும் நிலையில் இருந்தால் இது தொட்டது துலங்கும் காலமாகவும், புதிய உச்சத்தை தொடும் காலமாகவும் அமையும்.

ஐந்தில் குரு, மூன்றில் கேது என்கிற நிலைமை மிகவும் அரிதாகவே வரும் ஓர் அமைப்பு என்பதால் இதுவரை எந்த விஷயத்தில் தடங்கல்கள் தடைகள் உங்களுக்கு இருந்து வந்ததோ அவை அனைத்தும் தீர்ந்து நல்லதொரு முன்னேற்றமான ஒரு காலத்தை கன்னி ராசியினர் அடையப்போகிறீர்கள்.

குரு தன்னுடைய பார்வையால் ராசியைப் பார்க்கும் காலம் அனைத்து மனிதர்களுக்கும் யோகம் தரக்கூடிய ஒரு அமைப்பாக வேத ஜோதிடத்தில் வலியுறுத்தப்படுகிறது.

அதிலும் அவரது 9-ஆம் பார்வை மிகவும் விசேஷமானது என்கின்ற ஒரு நிலைமையில், தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியை இன்னும் 13 மாத காலத்திற்கு பார்க்கப் போவதாலும், மூன்றில் கேது இருப்பதாலும் கன்னிக்கு முயற்சி இன்றியே அனைத்து விஷயங்களும் கிடைக்கும் ஒரு காலகட்டம் இது.

ராசியை குரு பார்ப்பதால் உங்களின் மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகம் பொலிவு பெறும். அனைத்து விஷயங்களையும் ஆக்கபூர்வமாகச் சிந்தித்து நன்கு செயல்படுவீர்கள். சிந்தனை செயல்திறன் நன்றாக இருக்கும் என்பதால் இம்முறை அதிர்ஷ்டம் தங்களின் பக்கத்தில் இருப்பதைப் போல உணர்வீர்கள். எல்லா விதங்களிலும் நன்மைகளை மட்டுமே தரக்கூடிய ஒரு பெயர்ச்சி இது.

குருவின் இருப்பைவிட பார்வை பலமே மிகவும் நல்லதாக சொல்லப்படுகிறது. ஐந்தாம் இடத்தில் இருக்கும் குரு தனது 5ம் பார்வையால் பாக்கியஸ்தானம் என்று சொல்லப்படக்கூடிய ஒன்பதாம் இடத்தைப் பார்ப்பார்.

பாக்கிய ஸ்தானம் என்பது அவரவருடைய வயதிற்கு ஏற்றார் போல திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், மற்றும் தொழில் அமைப்புகளை கொடுக்கக்கூடியது. எனவே இதுவரை அவரவர் தகுதிக்கேற்ப உங்களுக்கு என்னென்ன பாக்கியங்கள் கிடைக்கவில்லையோ அந்த பாக்கியங்கள் அனைத்தும் கிடைப்பதற்கு குரு துணையிருப்பார்.

இந்த அமைப்பின் மூலம் இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் கிடைக்காதவர்களுக்கு குழந்தை பிறக்கும். நல்ல வேலை இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும்.

5ஆம் இடத்தில் இருந்து 11-ஆம் வீட்டைப் பார்க்கும் குருவால் லாப ஸ்தானம் வலுப்பெறுகிறது. இதுவரை வேலை தொழில் போன்ற அமைப்புகளில் அதிகமாக உழைத்தும் அதற்கேற்றார்போல கூலி கிடைக்காதவர்கள், சிரமத்திற்கு ஏற்ற பொருளாதார மேன்மை பெறாதவர்களுக்கு இம்முறை மிகச்சிறந்த நல்ல பலன்கள் இருக்கும்.

தொழில் இடங்களில் உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலகட்டம் இது. இதுவரை கடுமையான முயற்சி செய்தும் சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவற்றை பெறாதவர்கள் இந்த குருப்பெயர்ச்சியின் மூலம் இவையிரண்டும் உங்களை தேடி வர பெறுவீர்கள்.

லாப ஸ்தானத்தைப் பார்க்கும் குருவால் தொழில் வியாபாரம் போன்றவைகளில் இலாபம் நிறைவாக வரும். குறைந்த முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு கூட இதுவரை கிடைக்காத மிகப் பெரிய லாபம் கிடைக்கும். எனவே இம்முறை கன்னி ராசிக்காரர்களின் பொருளாதார நிலைமை சொல்லிக்கொள்ளும்படியாக இருக்கும் என்பது உறுதி.

குரு தனது 9ம் பார்வையால் உங்கள் ராசியை பார்ப்பதால் உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும் காலகட்டம் இது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்கு உடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள், தாமதமாகிப் போனவைகள் உடனடியாக நடந்து உங்களுக்கு மகிழ்ச்சியையும், வருமானத்தையும், புகழையும் தரும். தன்னம்பிக்கை மனதில் குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப் புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகளும் அதிருப்தியான நிலைமையும் மாறி தொழில் சூடு பிடிக்கும். வேலை செய்பவர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றம் மற்றும் விரிவாக்கத்திற்கான அனைத்தையும் தற்போது நல்ல விதமாகச் செய்ய முடியும். தடைகள் அனைத்தும் நீங்குவதால் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள்.

வியாபாரிகளுக்கு இது லாபங்கள் வரக்கூடிய காலகட்டமாக அமையும். எல்லா விதமான வியாபாரமும் இப்போது கை கொடுக்கும். கிளைகள் திறக்கலாம். புதிய டீலர்ஷிப் எடுக்கலாம். வருமானம் சிறப்பாக இருக்கும். தொழிலில் பங்குதாரர்களை சேர்த்துக் கொள்வதற்கு இது நல்ல நேரம். அவர்கள் மூலம் முன்னேற்றங்கள் இருக்கும்.

சில தொழில் முனைவோர்களுக்கு நல்ல சந்தர்ப்பங்கள் கிடைத்து அமோகமான தொழில் வெற்றியைப் பெற்று பெரும் பணக்காரர்கள் ஆவதற்கு தற்போது வாய்ப்பு இருக்கிறது. விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும் என்பது நிச்சயம்.

புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்ற பொருத்தமான வேலை அமையும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் வைத்திருப்பவர்கள் நல்லபடியாக அனைத்தையும் கிளியர் செய்வீர்கள்.

அரசு வேலை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மத்திய மாநில அரசுகளின் முதன்மைத் தேர்வுகளான ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற பதவிகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே அரசு, வங்கி போன்ற தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

திருமணமாகாத இளைய பருவத்தினருக்கு திருமண காலம் கூடி வந்து விட்டது. தடைகள் நீங்கி வரன்கள் கூடிவந்து திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஒரு சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களின் வாழ்க்கைத் துணைவரை அடையாளம் காண்பீர்கள். முதல் வாழ்க்கையில் சிக்கல்கள் தோன்றி கோர்ட், போலீஸ் என்று அலைந்து விவாகரத்து பெற்றவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும்.

சனியின் ஐந்தாமிட இருப்பால் மகன் மகள் விஷயத்தில் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் இனிமேல் இருக்காது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் பெரியவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை நல்லவிதமாக செய்ய முடியும். வயதானவர்கள் தாத்தா பாட்டியாக பதவி உயர்வு பெறுவீர்கள்.

சொந்த வீடு கட்டுவதற்கு இருந்து வந்த தடைகள் விலகும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தி இருந்தவர்கள் நல்ல விதமாக வேலையை முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட விலை உயர்ந்த வாகனம் வாங்க முடியும். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும் நகை சேர்க்கை இருக்கும்.

கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடியும். குழந்தைகளின் எதிர் காலத்துக்கு முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும்.

பொதுவில் கன்னி ராசிக்கு மிகவும் நன்மை தருகின்ற ஒரு குருப்பெயர்ச்சி இது. இனிமேலும் தயங்காமல் முன்னேற்றத்திற்கான முயற்சிகளை எடுக்க வேண்டிய தருணம் இது.

பரிகாரங்கள்:

குருவின் திருவருளை முழுமையாகப் பெற உங்களின் ஜன்ம நட்சத்திர தினம் அல்லது ஒரு வியாழக்கிழமை அன்று குரு ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு அதன் விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்குப் பிடித்த உணவினைத் தந்து அதன் ஆசிகளைப் பெறுங்கள்.

123082937 702326174025208 3217428758586626895 nவிருச்சிகம்:

விருச்சிக ராசிக்கு இதுவரை இரண்டாம் இடத்திலிருந்த குரு தற்போது மூன்றாமிடத்திற்கு மாறுகிறார். உங்கள் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை அத்தியாவசிய மாற்றங்கள் நடைபெறும் காலமாக இது இருக்கும்.

பொதுவாக மூன்றாம் இடத்திற்கு குரு பெயர்ச்சியாவது நல்லநிலை அல்ல என்று நமது கிரந்தங்கள் கூறினாலும் குரு தனது சுபப் பார்வைகளால் கணவன், மனைவி ஸ்தானமான ஏழு, பாக்கிய ஸ்தானமான ஒன்பது, லாபங்கள் தரும் பதினொன்றைப் பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட இனங்கள் மூலமாக இனி நல்ல பலன்கள் உங்களுக்கு நடைபெறும்.

மேலும் பிறந்த ஜாதகத்தில் நன்மையான தசா, புக்திகள் நடக்கும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த கோட்சாரக் குறைகள் பெரிதாக ஒன்றும் பாதிக்காது என்பதால் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை.

இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலமாக உங்களுக்கு நல்ல பணவரவும், வருமானங்களும் இருக்கும், பணத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலே பாதிப் பிரச்னைகள் தீர்ந்து விடும் என்று சொல்லுவது இம்முறை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

செய்கின்ற தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் அனைத்தும் அதன் உச்சபட்ச லாப நிலையில் நடக்கும் என்பதால் தொழில் அமைப்புகளில் முன்னேற்றத்தைப் பற்றிய கவலை உங்களுக்கு இருக்காது. குறிப்பாக இந்தப் பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலை, தொழில் பாதிக்காது. அதேநேரத்தில் இப்போது இருப்பதை விட முன்னேற்றமான மாற்றங்கள் உண்டு.

வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேருவார்கள். வேலையை விட்டு விடலாமா என்று யோசனையில் இருந்தவர்களுக்கு சூழ்நிலைகள் நல்ல விதமாக அமைந்து வேலையை விட வேண்டிய நிலை நீங்கும். தற்காலிகப் பணியாளர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்றபடி நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். அலுவலகங்களில் ஏதோ ஒரு சின்ன பிரச்னையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் இனிமேல் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகளால் இருந்து வந்த மன உளைச்சல்களும் வேலைப் பளுவும் நீங்கி உங்களை புரிந்து கொள்ளாமல் உங்களிடம் ‘கடுகடு’ வென இருந்த மேலதிகாரி மாறுதல் பெற்று அந்த இடத்திற்கு உங்களுக்கு அனுசரணையானவர் வருவார்.

இதுவரை சிக்கலில் இருந்த தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகள் மீண்டும் எழுச்சியுடன் நடைபெறப் போகும் காலம் வந்து விட்டதால் வியாபாரிகளுக்கும், தொழில் அதிபர்களுக்கும், சுய தொழில் செய்பவர்களுக்கும் இந்த குருப்பெயர்ச்சி மிகவும் கை கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இளைய பருவத்தினர் ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவார்கள். இளைய தலைமுறைக்கு இந்த குருப் பெயர்ச்சி யோகத்தை தரப் போவதோடு இதுவரை இருந்து வந்த மனக் குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாகவும் அமையப் போகிறது.

வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் விழுவதாலும், அவரே உங்கள் ராசிக்கு யோகம் தரும் அமைப்பிற்குரிய ஐந்துக்குடையவனாகி பார்ப்பதாலும் வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. செய்யும் தொழில் திருப்திகரமாக இருக்கும். இதுநாள்வரை இருந்து வந்த பொருளாதார நெருக்கடிகள் இருக்காது. கடையை மூடி வீட்டுக்கு திரும்பும் பொழுது மனநிறைவுடன் செல்ல முடியும்.

குருவின் ஏழாமிடப் பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பிரிந்து வாழும் தம்பதியர் சேரக் கூடிய சூழல்கள் உருவாகும். தொழிலில் பங்குதாரர்களிடம் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகி ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருப்பார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவார்கள்.

வேலை விஷயமாக வேறு வேறு ஊர்களில் பிரிந்து வேலை செய்யும் கணவன் மனைவிக்கு இந்தக் குருப் பெயர்ச்சியால் ஒரே ஊருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். வார இறுதி நாட்களில் மட்டும் குடும்பத்தோடு இருந்த நிலை மாறி குடும்பம் ஒன்று சேரும்.

திருமணமாகாத இளைய பருவத்தினத்தினருக்கு திருமணம் நடக்கும். விருச்சிக ராசிக்காரர்கள் வீட்டில் இந்த குருப் பெயர்ச்சியால் ஏதேனும் ஒரு சுப காரியம் உண்டு. குரு புத்திர காரகன் என்பதால் அவரது பாக்கிய ஸ்தானப் பார்வையால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியத்தை அருளுவார். ஆண் குழந்தைக்கு ஏங்கும் தம்பதிகளுக்கு ஆண் வாரிசு கிடைக்கும்.

முதல் திருமணத்தில் தடுக்கி விழுந்து, வாழ்க்கை கோணலாகி, துன்பத்தில் இருப்பவர்களுக்கு குரு இரண்டாவது வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்து தருவார். இந்த வாழ்க்கை நிலையாகவும் நீடித்தும் மனதிற்கு பிடித்த வகையிலும் இருக்கும். சில விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்கால வாழ்க்கைத் துணையை இப்போது சந்திப்பீர்கள். காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

குருவின் ஒன்பதாமிடப் பார்வையால் தந்தை வழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும்.

சிலருக்கு ஆலயப் பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

தள்ளிப் போயிருந்த நேர்த்திக் கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். இளைஞர்களுக்கு நீங்கள் விரும்பிக் கேட்கும் ஒரு பொருளை உங்கள் அப்பா வாங்கித் தருவார்.

மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகள் பலப்படும். வயதில் மூத்தவர்களுக்கு மங்களகரமான நிகழ்ச்சிகள் வீட்டில் நடைபெறும். இதுவரை திருமணம் தாமதமான அக்கா, அண்ணன் போன்றவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணமாகும். அதிகம் பெண்களுடன் பிறந்தவர்கள் தங்கள் சகோதரிகளின் வீட்டு சுப காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டியிருக்கும்.

பெண்களுக்கு இந்தக் குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத்தான் அதிகம் தரும். இதுவரை உங்களை புரிந்துக் கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

உடல்நலம் விஷயத்தில் கவனமாக இருங்கள். சிறு சிறு உடல் கோளாறுகள் வரலாம். நீடித்த குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வது நல்லது. சிறிய பிரச்னை என்றாலும் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்லுங்கள். வெளிநாட்டு விஷயங்கள் நல்ல பலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும்.

பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் விருச்சிக ராசிக்காரர்கள் மக்களின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய காலம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும் போதே கர்ணனின் கவச குண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சிலருக்கு மூத்த சகோதரம் எண்ணப்படும் அண்ணன், அக்காள்களால் நன்மைகள் இருக்கும். இதுவரை திருமணம் ஆகாமல் தள்ளிப் போயிருக்கும் மூத்தவர்களின் திருமணம் நல்லபடியாக நடக்கும். அண்ணன், அக்காக்களுக்கு திருமணம் ஆவதன் மூலம் உங்கள் திருமணத்திற்கு இருந்து வந்த தடை விலகும்.

பொதுவாக விருச்சிக ராசிக்கு இது எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளம் போடும் காலகட்டமாக அமையும். இப்போது ஏற்படும் அனுபவங்களால் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வீர்கள் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சியில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

பரிகாரங்கள்:

வேலூர் வாலாஜாபேட்டையில் அமைந்திருக்கும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் குருப் பெயர்ச்சி யாகத்தில் கலந்து கொள்ளுங்கள். சென்னையில் இருப்பவர்கள் வியாழக்கிழமை தோறும் சேக்கிழார் பெருமான் நிறுவிய வட ஆலங்குடி எனப்படும் போரூர் ஈஸ்வரன் கோவிலுக்கோ அல்லது குறுமுனி அகத்தியர் வந்து வழிபட்ட குரு ஸ்தலமான பாடி எனப்படும் திருவலிதாயம் கோவிலுக்கோ சென்று வழிபடுவது நல்லது. வெளிமாவட்டத்தவர்கள் அருகிலுள்ள பழமையான ஈஸ்வரன் கோவில் ஸ்ரீதட்ஷிணாமூர்த்திப் பெருமானை ஆராதியுங்கள்.

122878652 702326240691868 8886385383244177710 n e1604113561597தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இதுவரை ராசியில் இருந்து வந்த குரு தற்போது இரண்டாமிடத்திற்கு மாறுகிறார். இது உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான அமைப்பு என்பதால் இந்தக் குருப் பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன்கள் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.

முழுக்க உங்களுக்கு விடிந்து விட்டது. உங்களின் வேதனை அனைத்தும் விலகும் பெயர்ச்சி இது. இம்முறை உங்கள் ராசிநாதன் குரு நீச்ச நிலையை அடைந்தாலும் ஏற்கனவே அங்கே ஆட்சி நிலை பெற்றுள்ள சனியுடன் இணைந்து நீச்ச பங்கம் அடைவதால் மிக நல்ல பலன்களைத் தருவார்.

எந்த ஒரு விஷயத்திலும் இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் குழப்பங்கள், உடல்நலக்குறைவு, கடன்தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக்குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் தீர்ந்து தனுசு ராசிக்கு மிகவும் மேன்மையான ஒரு காலம் ஆரம்பிக்கிறது.

உடலிலும் மனதிலும் புதுத்தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தவை நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். வாக்குப் பலிதம் ஏற்படும். இதுவரை நடக்காமல் இருந்த விஷயங்கள் நடந்து மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் கூடும், முகத்தில் பொலிவு வரும்.

இதுவரை இல்லாத தன்னம்பிக்கை தேடி வந்து மனதில் குடி கொள்ளும். தலை நிமிர்ந்து நடப்பீர்கள். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் எந்த நேரமும் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

தொழில் சம்மந்தமான பிரச்னைகள் அனைத்தும் சாதகமாக திரும்பி பொருளாதார நிலைமைகள் உங்களுக்கு நிம்மதியாக இருக்கக்கூடிய அளவிற்கு நிலைமைகள் முன்னேற்றமாக இருக்கும். சென்ற காலங்களில் வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

இரண்டாமிடத்திற்கு வரும் குருவால் தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் மாறி தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

வருடக் கிரகங்களான ராகுவும், குருவும் தற்போது சாதகமான நிலையில் இருப்பதால் தனுசுவினர் எதிலும் தயக்கத்தினை விட்டொழித்து ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

தனுசுவினர் நியாயவான்கள் என்பதாலும், எந்த வேலைகளையும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையும் சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும், இந்த கிரக மாற்றத்தை நல்ல முறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும்.

வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும் காலம் இது. திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை இப்போது நீங்கும். புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு குருபலம் வருவதால் குழந்தைச் செல்வம் கிடைக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். குருவின் சிறப்புப் பார்வை உங்களின் ஜீவன ஸ்தானத்தில் விழுவதால் குரு பார்க்க கோடி நன்மை எனும் பழமொழிப்படி நல்லலாபமும் வருமானமும் கண்டிப்பாக கிடைக்கும்.

சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறித் தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றிக்கொடி நாட்டலாம்.

தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் அது முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத் தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும்.

இரண்டாமிடத்தில் குரு இருக்கப் போவதால் பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

பெண்கள் நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் இந்தக் குருப்பெயர்ச்சியில் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். பட்டுச்சேலை முதல் பாதக்கொலுசு வரை வாங்குவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

தனுசு ராசிக்கு அற்புதமான காலகட்டம் இது. நீங்கள் நினைப்பது நிறைவேறும். தொட்டது துலங்கும். இந்தக் குருப்பெயர்ச்சி உங்கள் எதிர்காலத்திற்கான அடித்தளங்களை அமைத்துத் தருவதாக அமையும். பரம்பொருளின் அருளினால் இதைப் பயன்படுத்தி வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வீர்கள் என்பது உறுதி.

பரிகாரங்கள்:

குரு தரும் நன்மைகளை முழுமையாகப் பெற புகழ்பெற்ற திருத்தலமான ஆலங்குடி சென்று சிறப்பு ஆராதனைகளை செய்யுங்கள். ஒரு வியாழக்கிழமை பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் குரு ஹோரையில் ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவு என்ன என்று பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு உணவிடுவது மிகுந்த நன்மை தரும்.

ராசி பலன்துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு தற்போது மூன்றில் இருக்கும் குரு நான்காம் இடத்திற்கு மாறப் போகிறார்.

நான்காமிடம் என்பது சுமாரான பலன்களை தரும் நிலைதான் என்றாலும், ஏற்கனவே இருந்து வந்த மூன்றாமிடத்தை விட நன்மைகளைத் தரும் ஸ்தானம் என்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி அனைத்திலும் பல நன்மைகளை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும் உங்கள் ராசிக்கு 3, 6 க்குடைய எதிரிக் கிரகமான குரு ஏற்கனவே நான்கில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சனியுடன் இணைந்து நீச்சம் பெற்று நீச்ச பங்கமாகி தனது புனிதப் பார்வையால் பத்தாம் இடத்தைப் பார்க்கப் போகிறார்.

இதன் மூலம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று உங்களின் பொருளாதார நிலை மேம்படும். எனவே இந்தக் குருப் பெயர்ச்சியினால் துலாம் ராசிக்காரர்களின் வேலை, தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற அனைத்தும் மேன்மை அடைந்து நல்ல லாபத்தை சம்பாதிப்பீர்கள்.

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தைப் வலுப்படுத்துவார் எனும் விதிப்படி உங்கள் ராசிக்கு 8, 10, 12ஆம் பாவங்களை குரு பார்வையிடுவார் என்பதால் மேற்கண்ட ராசிகள் முழுவலிமை பெறும்.

எட்டாம் பாவகமும், பனிரெண்டாம் பாவகமும் வெளி மாநிலம், வெளிநாடு இவைகளை குறிக்கும் என்பதால் இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநில வேலை வாய்ப்புகளையும், அது சம்பந்தமான தொழில்களில் இருப்போருக்கு நல்ல லாபங்களையும் தரும்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இப்போது வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரன், பேத்திகளை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலர் மகன், மகள்களுக்கு உதவி செய்ய வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வீர்கள்.

இந்தக் குருப்பெயர்ச்சியால் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் பற்றாக்குறையை நான்காமிடத்து குரு ஏற்படுத்துவார் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

நான்காமிட குரு ஜீவன அமைப்புகளான தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுப்பார் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த நிலைகள் மாறி புதுவிதமான அமைப்புகள் துலாம் ராசிக்காரர்களுக்கு உருவாகும். அது நல்லதாக இருக்கும்.

அரசு, தனியார் துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர் மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான மனதுடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.

வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலைகள் அமையும். நீண்ட நாட்களாக மன வருத்தத்தை கொடுத்துக் கொண்டு இருந்த உயரதிகாரி மாறுதலாகி, அந்த இடத்திற்கு அனுசரணையானவர் வருவார்.

பத்தாமிடத்தைக் குரு பார்க்கப் போவதால் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் தடைகள் விலகி நல்லபடியாக நடக்க ஆரம்பிக்கும். சுயதொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். மஞ்சள் நிறம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு மேன்மையான பலன்கள் இருக்கும். தங்கநகை, நவதானியம், ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள், கோவில்கள், வழிபாட்டுத் தலங்களை சுற்றி கடை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்.

கடன்கள் கட்டுக்குள் இருக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள். சிலருக்கு அலைச்சல்களும் மந்த நிலையும் ஒருபுறம் இருந்தாலும் இன்னொருபுறம் தொழில் முன்னேற்றமும் வருமானமும் கண்டிப்பாக இருக்கும்.

கோவில் அர்ச்சகர்கள், நமது பாரம்பரியம் பண்பாடு சம்பந்தப்பட்ட கலைகளை கற்றுத் தருபவர்கள் நீதித்துறையில் பணிபுரிபவர்கள், மேன்மை தங்கிய நீதியரசர்கள், சட்டவல்லுனர்கள், பணம் புரளும் துறைகளான வங்கி சிட்பண்ட் சம்பந்தப்பட்ட கன்னி ராசியினர் அனைவருக்கும் இந்த குருப்பெயர்ச்சி நன்மைகளை மட்டுமே தரும்.

சுபக்கிரகமான குரு எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்துவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பலநாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். வீண்விவகாரங்களில் தலையிடுவதும் அடுத்தவர்களுக்காக பரிந்து பேசி வம்பை விலைக்கு வாங்குவதும் இந்த காலகட்டங்களில் நடைபெற்று விரோதங்கள் வரும் என்பதால் எங்கும் எதிலும் எச்சரிக்கை தேவை.

சிலருக்கு பயணம் சம்பந்தமான வேலைகள் அமைந்து அலைச்சல்களும் பிரயாணங்களும் அதிகமாக இருக்கும். பயணங்களால் லாபமும் இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் சிறிது தாமதத்திற்கு பிறகு நல்லபடியாக நடைபெறும். உறவினர்களிடம் சுமூகமான உறவு ஏற்படுவது கடினம்.

இருக்கும் வாடகை வீட்டை மாற்றி புதிதாக ஒத்திக்கு எடுத்தல் அல்லது புது வீடு வாங்குதல் போன்றவைகள் நடக்கும். நீண்டகால வீட்டுக்கடன் பெற்று வீடு வாங்க முடியும். இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமூக நிலையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.

ரேஸ், லாட்டரி, பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் இப்போது ஓரளவு கை கொடுக்கும். எட்டாமிடம் என்பது புதையல், லாட்டரி போன்ற திடீர் பண லாபத்தைக் குறிக்கும் இடம் என்பதாலும் அந்த பாவத்திற்கு குருவின் பார்வை கிடைப்பதாலும் எதிர்பாராத பணவரவு ஒன்று உங்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் கிடைக்கும்.

கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த பிரச்னைகள் தீரும். கணவன் ஓரிடம் மனைவி வேறிடம் என்று பிரிந்து இருந்தவர்கள், வேலை விஷயமாக வெளியூரில் பிரிந்து வேலை பார்த்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச் செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச் செலவுகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை செலவிட வேண்டியது இருக்கும்.

குரு நான்காமிடத்தில் இருக்கும் பொழுது குடும்பச் சொத்துக்களை விற்கக் கூடாது. பூர்வீகச் சொத்துகளையோ வீடு நிலம் போன்றவைகளையோ விற்பதற்கான தேவை உள்ளவர்கள் விற்பனையை இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைப்பது நல்லது.

குருவின் பார்வை பனிரெண்டாம் இடத்திற்கு விழுவதால் வீடோ, நிலமோ விற்ற பணம், விற்ற நோக்கத்திற்காக செலவாகாமல் வேறு வகையில் விரயம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள் நிறைய இருக்கும் என்பதால் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்குமுன் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து செலவு செய்யுங்கள். கோர்ட், கேஸ், நிலம் சம்பந்தமான வழக்குகள், போலீஸ் விவகாரங்கள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்களுக்கு இப்போது சாதகமான தீர்ப்பு வரும்.

குருவின் பார்வையால் எட்டாமிடம் வலுப் பெறுகிறது. ஒரு சுபக்கிரகம் எட்டாமிடத்தைப் பார்த்து வலுப்படுத்தினால் அந்த பாவகத்தின் கெட்ட பலன்கள் அதிகமாக நடக்கும் என்பதால் உங்களுக்கு எதிர்மறையான செயல்களும் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தக்கூடிய விஷயங்களும் நடக்கும். எதிலும் நிதானமும் எச்சரிக்கையுமாக இருப்பது நல்லது.

பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். பத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

கோவில் திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். ஞானிகளின் திருத்தலங்களுக்கு பயணம் செல்வீர்கள். மகாபெரியவரின் அதிஷ்டானத்திற்கு சென்று அவரின் அருளைப் பெறும் பெரிய பாக்கியம் கிடைக்கும். ஷீரடி மந்திராலயம், பகவான் சத்யசாயியின் திரு இடம் போன்ற புனிதத் தலங்களுக்கு போக முடியும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சியால் நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். நீங்கள் சொல்வதையும் கேட்கலாமே என்று கணவர் நினைப்பார். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உங்கள் அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார்கள்.

பரிகாரம் :

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று தாய், தந்தை அல்லது நீங்கள் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரை கிழக்குப் பார்க்க நிறுத்தி வைத்து அவர்களின் கையில் ஒரு கிழங்கு மஞ்சளை கொடுத்து பிறகு அவரது கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து பின்பு அந்த மஞ்சளை வாங்கி தரையில் வைக்காமல் ஒரு மஞ்சள் தட்டில் வைத்து பின் அதை புது மஞ்சள் துணியில் முடித்து பூஜை அறையில் வைத்து வியாழன்தோறும் அதனை வழிபட்டு வருவது இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல பலன்களைத் தரும்.

aries 2015மகரம்:

மகர ராசிக்கு இதுவரை பனிரெண்டாமிடத்தில் இருந்த குரு இப்போது உங்கள் ராசிக்கே இடம் பெயர்ந்து ஜன்ம குருவாக மாறுகிறார்.

ராசிக்கு வரும் குரு ஏற்கனவே ஜென்மச்சனி அமைப்பில் உங்கள் ராசியில் இருக்கும் சனியை சுபத்துவப் படுத்துவார் என்பதால் தற்போது ஏழரைச் சனியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஒரு விடியலைக் காட்டும் பெயர்ச்சியாக இது அமையும்.

இருள் கிரகமான சனி, ஜென்மச் சனியாக உங்கள் ராசியில் அமர்ந்ததால் கடந்த சில மாதங்களாக மகரத்தினர் அவஸ்தையில் இருக்கிறீர்கள். இன்னும் சொல்லப்போனால் உங்களில் சிலர் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான சிக்கல்களில் இருக்கிறீர்கள். அவரவர் வயது, இருப்பிடம், சூழ்நிலைக்கேற்ப கெடுபலன்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

நீங்கள் மகர ராசியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வீட்டில் ஒரு மகர ராசிக்காரர் கணவன், மனைவி, குழந்தை என்ற உறவில் இருந்தாலே அந்தக் குடும்பத்தில் நன்மைகள் எதுவும் நடக்கவில்லை. உங்களில் இளைய பருவத்தினர் விரக்தியில் இருக்கிறீர்கள். ஏழரைச்சனியின் சாதகமற்ற பலன்கள் மட்டும்தான் மகரத்திற்கு முன்னே நிற்கிறது.

நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி மூலம் இதுவரை உங்களை கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் ஜென்மச் சனி அமைப்பு குரு, சனி இணைவால் சுபத்துவப்படுத்தப்பட்டு இனிமேல் உங்களுக்கு நன்மைகள் இருக்கும்.

இந்தப் பெயர்ச்சி மூலம் இதுவரை இழந்த, இழந்து கொண்டிருக்கும் அனைத்தையும் மகரத்தினர் திரும்பப் பெறப் போகிறீர்கள். கடுமையான சோதனைக் காலம் முடிய இருக்கிறது. இனி நடக்க இருக்கும் அனைத்தும் உங்களுக்கு சுப விஷயங்களை மட்டுமே தரும்.

குறிப்பாக குருவின் இப்போதைய ராசி அமர்வால், சனி தரும் இருள் நீங்கி உங்கள் ராசி ஒளி பெறுகிறது. அதாவது நீங்கள் ஒளி பெறப் போகிறீர்கள். உங்களைச் சுற்றி ஒரு பாசிடிவ் எனர்ஜி உருவாகப் போகிறது. இனிமேல் நீங்கள் நன்றாக இருக்கப் போகிறீர்கள்.

இந்த அமைப்பால் சென்ற வருடத்தை விட இந்த வருடம் வருமானம் நன்றாக இருக்கும். பணவரவும் சரளமாக இருக்கும். இம்முறை தொழில் மேன்மை மற்றும் பொருளாதார வசதிகளை குரு அளிப்பார். நடக்கும் மாற்றங்கள் சாதகமாக இருப்பதால் இதுவரை இருந்து வந்த மனக் கவலைகள் குழப்பங்கள், உடல்நலக் குறைவு, கடன் தொல்லை மற்றும் எதிர்மறை எண்ணங்கள், தொழில் தேக்கம், அதிர்ஷ்டக் குறைவு, தடைகள், தாமதங்கள் போன்ற அனைத்தும் இனி விலகும்.

வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த அதிருப்திகளும் சஞ்சலங்களும் விரக்தியும் இனிமேல் இருக்காது. உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும்.

இதுவரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதமாகிப் போனவைகள் கிடைக்கும். மாறும் கிரகநிலைகள் இப்போது மகிழ்ச்சியையும், வருமானத்தையும் தரும். சிந்தனை, செயல்திறன் ஆக்கப்பூர்வமாக இருக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை குடி கொள்ளும். கௌரவம், அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து உங்களுடைய சொல்லை அனைவரும் கேட்கும் நிலை உருவாகும்.

சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மிகப் பெரிய திருப்பு முனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவு படுத்தும் எண்ணங்கள் ஈடேறும். தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும்.

போட்டி பந்தயங்கள் கை கொடுக்கும். கூட்டுத்தொழிலில் இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி பங்குதாரர்களிடையே இணக்கமான சூழல்கள் இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பணிபுரிபவர்களுக்கு நெடுநாட்களாக தள்ளிப் போய் இருந்த பதவி உயர்வும் சம்பள உயர்வும் இப்பொழுது கிடைக்கும்.

தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

ராசியில் ஜன்ம குரு மற்றும் சனி இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு மறைமுக வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இந்தக் குருப் பெயர்ச்சியால் இருக்கும். அடிக்கடி ஞாபகமறதி வரும். கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

ராசியில் அமரும் குரு தனது மதிப்பு மிக்க பார்வையால் உங்களுடைய ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களை பார்வையிட்டு அந்த இடங்களை புனிதப்படுத்துவார் என்பதால் அந்த பாவகங்களின் மூலமாக உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.

குருவின் ஏழாமிட பார்வையால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். வேறு வேறு இடங்களில் பணிபுரிந்த கணவன், மனைவிக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை குருவால் இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச் செலவுகளும் இருக்கும். சொத்து வாங்குவீர்கள். மனைவிக்கு நகை, பெண்குழந்தைகளின் திருமணத்திற்கென்று நகைசேமிப்பு போன்றவைகளை இப்போது செய்ய முடியும்.

பெண்களுக்கு நன்மைகள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் உங்களின் பேச்சு எடுபடும். மாமியாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள். பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். அந்தஸ்து கௌரவம் உயரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள்.

மகர ராசியினருக்கு மகன், மகள் விஷயத்தில் இருந்து வந்த மனக்கவலைகள் தீரப் போகிறது. வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த இளைய வயதினருக்கு நல்லவேலை கிடைக்கும். தாமதமாகிக் கொண்டே வந்த மகன், மகள் திருமணத்தை இப்போது நல்லபடியாக நடத்துவதற்கு குரு அருள் புரிவார்.

காதலித்துக் கொண்டிருக்கும் இளைய பருவத்தினருக்கு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் கை கூடி வரும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பித்து தங்களது வாழ்க்கைத் துணையை அடையாளம் காண்பார்கள். முதல் திருமணம் முறிந்து விவாகரத்தாகி இரண்டாவது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வழி பிறக்கும்.

குழந்தைகளால் பெருமைப் படத்தக்க சம்பவங்கள் இருக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

புத்திர தோஷத்தினால் நீண்டகாலமாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இப்போது குழந்தை பிறக்கும் நேரம் வந்து விட்டது. குரு புத்திரகாரகன் என்பதால் அவர் ஐந்தாமிடத்தைப் பார்க்கும் இந்த நேரத்தில் எப்பேர்ப்பட்ட தோஷம் இருந்தாலும் அதை நீக்கி குழந்தை பாக்கியம் அருளுவார்.

வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் கை கொடுக்கும். வெளி நாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு இந்த தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. உங்கள் ராசிநாதன் சனியே உங்களின் இரண்டாம் பாவகத்திற்கும் அதிபதி என்பதால் அவர் ஆட்சிநிலை மற்றும் குருவின் இணைவால் சுபத்துவம் பெறும் இந்த வருடத்தில் வீட்டு விஷயத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டு. தனாதிபதி சுபரோடு இணைவதால் அனைத்து பண விஷயங்ககளும் நல்ல விதமாக இருக்கும்.

குறிப்பாக இதுவரை வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். இதுவரை வசதியில்லாத வீட்டில் இருந்தவர்கள் காற்றோட்டமான, விசாலமான வீட்டிற்கு குடி போவீர்கள். நீண்ட நாட்களாக சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும்.

மொத்தத்தில் இந்தக் குருப்பெயர்ச்சி கெடுதல்கள் இல்லாமல் எதிர்காலத்தில் நீங்கள் சிறப்பாக இருக்க வேண்டியதற்கான அடிப்படை விஷயங்களைச் செய்யும்.

பரிகாரங்கள்:

மூத்தவர்களுக்கும் குரு ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கும் சிறு உதவியாக இருந்தாலும் தேடிப் போய் உதவி செய்து அவர்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் பெறுங்கள். வயதானவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உதவுவது, ஏழை மாணவருக்கு கல்வி உதவி, வசதிக்குறைவான பெண்ணிற்கு திருமணத்திற்கு உதவுவது போன்றவைகளால் குருவால் கிடைக்கும் நன்மைகளை இன்னும் பெருக்கிக் கொள்ள முடியும்.

123135466 702326364025189 8443342096666521534 nகும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இதுவரை நன்மை அளிக்கும் இடமாக சொல்லப்படும் பதினொன்றாம் இடத்தில் இருந்த குரு தற்போது செலவுகளையும், விரையங்களையும் தரும் ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டிற்கு மாறுகிறார்.

குருப்பெயர்ச்சி, ராகு, கேதுப்பெயர்ச்சி போன்ற கோட்சார கிரக மாற்றப் பலன்களே பொதுவான பலன்கள்தான் என்றாலும் அதிலும் துல்லியமான நுட்ப விதிகளைப் பயன்படுத்தித்தான் நான் பலன் சொல்லுகிறேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதன்படி இந்தக் குருப் பெயர்ச்சியின் பலன்கள் சிறிது சாதகமற்ற அமைப்பில் இருந்தாலும் ஏற்கனவே கும்பத்திற்கு விரையச் சனி என்ற நிலையில் ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் ஒருவருக்கு ஏழரைச்சனி நடக்கும் போது சனியின் கெடுபலன்கள் மட்டுமே முன்னே நிற்கும். குரு உள்ளிட்ட மற்ற கிரகங்கள் நன்மை தரும் அமைப்பில் இருந்தாலும் கூட அதை சனி தடுப்பார். எனவே இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் நன்மைகளோ தீமைகளோ கும்பத்திற்கு பெரிதாக ஒன்றும் நடந்து விடப் போவதில்லை.

கும்ப ராசிக்கு இ\ப்போது இரண்டு பிரிவாக நான் பலன் சொல்வேன். அதாவது இந்தக் குருப்பெயர்ச்சியின் மூலம் இளைஞர்களுக்கு சாதகமற்ற பலன்களும், நடுத்தர வயதினருக்கு நல்ல பலன்களும் நடக்கும்.

இளைய பருவத்தினர் படிப்பையும், தங்களுக்குண்டான வேலையையும் மட்டும் கவனிப்பது நன்மைகளைத் தரும். சிலருக்கு இந்த நேரத்தில் காதல் போன்ற விஷயங்கள் வந்து மற்ற எல்லாவற்றையும் மறக்கச் செய்து முடிவில் துன்பத்தில் கொண்டு போய் விட்டு விடும் என்பதால் இது போன்ற எண்ணங்களை மூட்டை கட்டி மூலையில் வைத்து விட்டு எதிர்காலம் நன்றாக இருப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் வாழ்வு சிறக்கும் என்பது உறுதி.

முக்கியமாக குடிப்பழக்கம் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடி நிலையத்தில் உங்களிடம் வீண் சண்டை போடுவதற்கென்றே ஒருவர் காத்துக் கொண்டிருப்பார். அதிர்ஷ்டமும் அவர் பக்கம்தான் இருக்கும். அசிங்கம், கேவலம், வம்புச் சண்டை வரும் காலம் இது. எதிலும் நிதானமாக இருங்கள்.

எதிர் வரும் வருடத்தில் எந்த ஒரு விஷயமும் நீண்ட முயற்சிக்கு பின்பே வெற்றியைத் தரும் என்பதால் இந்த காலகட்டத்தில் இளைய பருவத்தினருக்கு கடினஉழைப்பும் விடாமுயற்சியும் கண்டிப்பாகத் தேவைப்படும். சில நேரங்களில் தோல்வி மனப்பான்மையும் விரக்தியும் ஏற்படலாம் என்பதால் அனைத்து விஷயங்களிலும் ஒரு முறைக்கு நான்கு முறை யோசித்து செயல்படுவது நல்லது.

போட்டி பந்தயங்கள், லாட்டரி சீட்டு, ரேஸ் போன்றவை தற்போது கை கொடுக்காது. யூகவணிகம், பங்குச்சந்தை போன்றவைகள் சிறிது பணம் வருவது போல் ஆசைகாட்டி முதலுக்கே மோசம் வைக்கும் என்பதால் கொஞ்ச நாட்களுக்கு பங்குச் சந்தை போன்ற விவகாரங்களில் தலை காட்டாமல் இருப்பது நல்லது.

அனாவசியமான வாக்குவாதங்களை தவிருங்கள். தேவையின்றி எவரையும் பகைத்து கொள்ள வேண்டாம். உறவினர்களால் சொத்து சம்பந்தமான வில்லங்கம் வரலாம். இதுவரை நண்பர்களாக இருந்தவர்கள் மாறுவார்கள். குறிப்பாக சொல்வதானால் கும்பத்தினர் இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு எந்த வித புது முயற்சிகளும் தொழில் ரீதியாக செய்யாமல் இருப்பது நல்லது.

அதிகப் பணத்தை முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்வதோ, புதிய கிளைகள் ஆரம்பிப்பதோ, வேறு எந்த வகையிலும் புதியவைகளை செய்வதோ இப்போது வேண்டாம். தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது சரியான நேரம் அல்ல. இருக்கும் தொழிலை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வியாபாரிகள் தொழிலிடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். வேலைக்காரர்களை நம்பி கடையையோ தொழில் ஸ்தாபனத்தையோ ஒப்படைத்தால் வேலை செய்பவர்களின் ஆதிக்கம் மேலோங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

முதலீடின்றி தனது திறமையை மூலதனமாக வைத்து சொந்தத் தொழில் செய்பவர்கள், மெக்கானிக்குகள் போன்ற சுய தொழிலர்கள், கடுமையான உழைப்பாளிகள், ஆலைத் தொழிலாளர்கள் விவசாயிகள் கலைஞர்கள் போன்றவர்களுக்கு வருமானம் மற்றும் பணவரவுகளுக்கு எந்தக் குறையும் வராது. இந்தப் பிரிவினருக்கு நெருக்கடிகள் இருக்குமே தவிர நஷ்டங்கள், கஷ்டங்கள் எதுவும் இருக்காது.

அரசு, தனியார் துறைகளில் வேலை செய்பவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு அதிகமாக ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். அவற்றால் வேறு விதமான பிரச்னைகள் வரும்.

பணியிடங்களில் மேலதிகாரி சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம்.

குருவின் பார்வையால் நான்கு, ஆறு, எட்டு ஆகிய இடங்கள் வலுப் பெற்று அந்த பாவகங்களுக்குரிய விளைவுகளைச் செய்யும் என்பதன்படி நான்காமிட குருவின் பார்வையால் வீடு, வாகனம், தாயார், தன் சுகம், கல்வி ஆகிய விஷயங்களில் உங்களுக்கு நல்லபலன்கள் கிடைக்கும். இதுவரை சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இப்போது கடன் வாங்கியோ, ஹவுசிங் லோன் போட்டோ, சொந்த வீடு அமையும்.

பெருநகரங்களில் உள்ளவர்கள் சொந்த பிளாட் வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை விட நல்ல சொகுசு வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தாய்வழி சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் விலகும். தாயாரின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்கள். உயர்கல்வி கற்க தடங்கல்கள் விலகும்.

குருவின் ஆறாமிடத்துப் பார்வையால் ஆறாம் பாவகம் வலுப்பெறும் என்பதால் மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். நண்பர் ஒருவரே உங்களுக்கு எதிராக திரும்பி விரோதியாகும் வாய்ப்பு இருக்கிறது. அதற்கு உங்களுடைய முன் யோசனை இல்லாத அவரசக் குடுக்கைத்தனமான செய்கையோ அல்லது கவனமின்றி சொல்லப்படும் ஒரு வார்த்தையோ காரணமாக இருக்கும்.

வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் இப்போது வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

பழைய கடனை புதுக் கடன் வாங்கி அடைக்க நேரிடலாம். அல்லது தொழில் விரிவாக்கம், வியாபாரம், புதுத்தொழில் போன்றவற்றிற்காக கடன் வாங்க நேரிடலாம். கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம்.

தேவையில்லாமல் எவரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். யாரிடமும் அனாவசியமாக பேசி சிக்கலை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும்.

எட்டாமிடம் வலுப் பெறுவதால் வெளிநாடு சம்பந்தப்பட்ட கம்பெனியில் வேலை செய்பவர்கள், வெளிநாட்டோடு வியாபாரத் தொடர்பு வைத்திருப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் மேன்மை அடைவார்கள். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு விசா கிடைக்கும். மாணவர்கள் கல்வி கற்க வெளிதேசம் செல்வார்கள்.

சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது நடக்கும். வீடு மாற்றம் தொழில் மாற்றம் வாழ்க்கைக்கு தேவையான முக்கியமான ஒரு விஷயத்தில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும். இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில், நகரும் பொருட்கள் சம்பந்தப்பட்ட துறையினருக்கு இப்போது தொழில் மாற்றங்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும்.

டிரான்ஸ்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு வெளியூருக்கு மாறுதல்கள் கிடைக்கும். இந்தக் குருப் பெயர்ச்சியால் தொழில் ரீதியான பயணங்கள் அடிக்கடி இருக்கும். வெளி மாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள் இருக்கும். வெளிநாட்டுப் பயணங்களும் உண்டு.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப்பெரிய மேன்மைகளை அளிக்கும் என்பது உறுதி. வேலை செய்யும் இடங்களில் இதுவரை இருந்து வந்த மனக் கசப்புகள் அனைத்தும் நல்லபடியாகத் தீர்ந்து உங்களுடைய அதிகாரங்களும் மேலாண்மையும் நிலைநாட்டப் படும். இதுவரையில் வீட்டிலும், அலுவலகத்திலும் இருந்து வந்த அனைத்து பிரச்னைகளும் நல்லபடியாக, சாதகமாக முடிவுக்கு வந்து நிம்மதி அடைவீர்கள்.

கும்பத்தினர் தங்கள் உழைப்பின் மூலம் அனைத்து சோதனைகளையும் வெற்றியாக, சாதனைகளாக மாற்றக் கூடியவர் என்பதால் பெரிதாக ஒன்றும் உங்களைப் பாதிக்காது. இந்தக் குருப்பெயர்ச்சி சில மாற்றங்கள், அலைச்சல்களைக் கொடுத்தாலும் அனைத்தும் உங்களின் எதிர்கால நன்மைக்கே என்பது உறுதி.

பரிகாரங்கள்:

ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள பழமையான சிவன் கோவிலில் அருள்புரியும் காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவதும், வியாழக்கிழமையன்று தக்ஷிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் நல்லது. சென்னையில் இருப்பவர்கள் நங்கநல்லூர் மற்றும் ஆழ்வார்ப்பேட்டை ஆஞ்சநேயர் ஆலயங்களுக்கு சென்று அவரின் அருள் பெறுவதும் துன்பங்களைக் குறைக்கும்.

123078810 702326417358517 3706964134079934743 nமீனம்:

மீன ராசிக்கு பணவரவையும், அந்தஸ்தையும் தரக்கூடிய லாபஸ்தானம் எனப்படும் பதினோராம் இடத்திற்கு குருபகவான் மாற இருக்கிறார். இந்தப் பெயர்ச்சியின் மூலம் உங்களின் தொழில் அமைப்புகளில் சாதகமான பலன்கள் நடக்கும்.

லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு தனது விசேஷ பார்வைகளால் உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாமிடங்களைப் பார்ப்பார் என்பதால் அந்த இடங்கள் வலுப் பெற்று உங்களுக்கு நல்ல பலன்களை செய்யும்.

குருவின் மூன்றாமிடப் பார்வையால் எதையும் சமாளிக்கும் மனதைரியம் வரும். உண்மையில் எப்பேர்ப்பட்ட பிரச்னையையும் மன உறுதியுடன் சமாளிப்பீர்கள். ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். இளைய சகோதரத்தால் நன்மை உண்டு. தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர, சகோதரிகள் உதவுவார்கள். சகோதர வழியில் உங்களுக்கும் உதவிகளும், நன்மைகளும் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களிடம் காரியம் சாதித்து கொள்வார்கள். அவர்களுக்கு உதவ முடியும்.

பெண்களுக்கு தங்கம் மற்றும் வைரத்திலான கழுத்துநகை வாங்கும் யோகம் இருக்கிறது. மூன்றாம் இடம் கழுத்துப் பகுதியை குறிக்கும் என்பதால் இளம் பெண்களுக்கு தாலி பாக்கியமும், திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் இந்த குருப்பெயர்ச்சியால் நடக்கும்.

கீர்த்தி ஸ்தானம் சுபத்துவம் பெறுவதாலும், ஏற்கனவே அங்கே நல்ல பலனைத் தரக்கூடிய நிலையில் ராகு இருப்பதாலும் மீன ராசிக்காரர்கள் சிலர் புகழடைவீர்கள். அவரவர் துறைகளில் அவரவர் வயதிற்கேற்ப சாதனைகள் செய்வீர்கள். ஜோதிடத்தில் மூன்றாமிடம் பிரபலமடைவதைக் குறிக்கும் என்பதால் நவீன யுகத்தில் டி.வி. போன்ற காட்சி ஊடகங்களிலும், பத்திரிகை போன்ற எழுத்து ஊடகங்களிலும் மீனத்தினரால் சாதிக்க முடியும்.

கணவன், மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் இருக்கும். குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமிப்பு மற்றும் முதலீடு செய்ய முடியும். பிள்ளைகள் விரும்பிய பள்ளி, கல்லூரிகளில் அவர்களை சேர்க்க முடியும். தந்தை வழியில் நல்ல செய்திகள் இருக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு செல்வீர்கள்.

குரு தனது பார்வையால் ஐந்தாமிடத்தைப் பார்த்து புனிதப் படுத்துவதால் வயதானவர்களில் இதுவரை தீர்த்த யாத்திரை செல்லாதவர்கள் புனிதத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். காசி, கயா, பத்ரிநாத், கேதார்நாத், கயிலை போன்ற வடமாநில புனித யாத்திரை செல்லும் பாக்கியம் சிலருக்கு கிடைக்கும்.

பூர்வ புண்ணிய ஸ்தானம் குருவின் பார்வையால் வலுப் பெறுவதால் மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். குலதெய்வம் எதுவென்று தெரியாதவர்களுக்கு இறையருளால் இவர்தான் தெய்வம் என்று தெரிய சந்தர்ப்பம் வரும்.

குரு, சனி இருவரும் பதினொன்றில் இணைவதால் ஷீரடி மகான், ராகவேந்திரர், மகாபெரியவர், பகவான் ரமணர், சத்யசாய் போன்ற ஆன்மிகத் திருவுருக்கள் அவதரித்து அருளாட்சி செய்த திருத்தலங்களை தரிசிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகமாகும். அறப்பணிகளில் ஆர்வம் அதிகரித்து ஈடுபாடு காட்டுவீர்கள். கும்பாபிஷேகம் போன்ற ஆலயத் திருப்பணிகளில் பங்கேற்கும் பாக்கியம் கிடைக்கும்.

கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும். குழந்தை இல்லாத தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும்.

குரு சாதகமான இடத்தில் இருந்தாலும், அவர் நீச்ச நிலை அடைந்து பின்னர் சனியினால் நீச்ச பங்கம் அடைகிறார். என்ன இருந்தாலும் உங்களின் ராசி நாதனான குரு நீச்சம் எனப்படும் பலவீன நிலையை அடைவது நல்லதல்ல. இது போன்ற நிலைகளில் கிரகங்கள் முதலில் சாதகமற்ற பலனைத் தந்து அதன்பின்னர் நல்ல பலன்களைத் தரும்.

இந்த குருப்பெயர்ச்சி காலம் முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப் பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப் பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

லாபஸ்தான குருவால் தனம் வந்து சேரும் என்பதால் பண வரவிற்கு தடையாக இருந்த விஷயங்கள் மாறி உங்களுடைய தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுப் பெற்று பொருளாதார மேன்மை அடைவீர்கள். உங்கள் சொல்லும் பலித்து, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். நாளைக்கு வா பணம் தருகிறேன் என்று ஒருவருக்கு வாக்குறுதி அளித்தால் இன்றைக்கு இரவே அவருக்கென்று பணத்தை ஒதுக்கி வைக்கமுடியும்.

குருவைப் போன்றே வருடக் கிரகங்களான சனியும், ராகுவும் மிகவும் சாதகமான நிலையில் இருப்பதால் மீனத்தினர் இப்போது எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

மீன ராசிக்காரர்கள் இயற்கையாகவே நல்ல புத்திசாலிகள் என்பதாலும், உருவாக்கும் வேலை எனப்படும் கிரியேட்டிவ் பணிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யக் கூடியவர்கள் என்பதாலும், எதையுமே சட்டென கிரகித்துக் கொள்வீர்கள் என்பதாலும் இந்த மாற்றத்தை நல்லமுறையில் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் செட்டில் ஆவீர்கள்.

பொதுவாக மீன ராசியினர் நடுநிலை தவறாதவர்களாகவும், நீதிமான்களாகவும் இருப்பீர்கள். யார் தவறு செய்தாலும் பொறுத்துக் கொள்ள மாட்டீகள். எதற்கும் விலை போக மாட்டீர்கள். உண்மையான அன்புக்கும், நட்புக்கும் மதிப்பு கொடுப்பீர்கள். பணம் வேண்டுமா புகழ் வேண்டுமா எனக் கேட்டால் புகழைத் தேர்ந்தெடுக்கக் கூடியவர்கள் நீங்கள். பிறந்த ஜாதகத்தில் யோகமான தசா புக்திகள் நடந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது இரட்டிப்பு பலன்கள் நடக்கும்.

நல்ல வேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள், ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர் நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும்.

பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் முன்னேற்றமாக நடக்கும்.

அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப் பளு குறைந்து சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சுயதொழில், வியாபாரம் போன்றவைகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை விலகி அனைத்தும் இனிமேல் சுறுசுறுப்பாக நடக்கும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ, கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம்.

விவசாயிகளுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகுந்த நன்மையை அளிக்கும். விளைந்த பயிர் சிந்தாமல் சிதறாமல் வீட்டிற்கு பொன்னாக வரும். குடியானவனின் வீட்டில் குதூகலமும், சுப நிகழ்ச்சிகளும் இருக்கும். குறிப்பாக பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு மேன்மை உண்டு.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும் கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். உடன் பணிபுரியும் ஆண்களின் ஒத்துழைப்பும் உங்களுக்கு கிடைக்கும்.

குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

பரிகாரங்கள்:

மீனத்தினர் ஸ்ரீதட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு வியாழக்கிழமை தோறும் விரதமிருப்பதும், வியாழன் தோறும் அவரை பூஜித்து வழிபடுவதும், ஜன்ம நட்சத்திரம் அன்று ஒருமுறை ஆலங்குடி, சென்னை பாடி திருவலிதாயம், வட ஆலங்குடி என அழைக்கப்படும் போரூர் ஈஸ்வரன் கோவில், திருச்செந்தூர் போன்ற குரு ஸ்தலங்களுக்கு சென்று குருபகவானை ஆராதிப்பதும் அதிர்ஷ்டங்களைத் தரும்.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

[td_block_7 f_header_font_family=”662″ m6f_title_font_family=”662″ m6f_title_font_weight=”500″ limit=”3″]
- Advertisement -