கடந்த 29ஆம் மற்றும் 30ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தை விட்டு வௌியேறியவர்கள் சுய தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே 14 நாட்களுக்கு இவ்வாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸ் தலைமையகத்திற்கு அறியத்தருமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கண்டறியப்படும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.