Home India அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்- அச்சத்தில் மக்கள்!

அருணாசல பிரதேசத்தில் நிலநடுக்கம்- அச்சத்தில் மக்கள்!

அருணாசல பிரதேசத்தின் சங்லாங் நகரில் இருந்து தென்மேற்கே 47 கி.மீ. தொலைவில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) காலை 8.01 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இது ரிக்டரில் 3.4 ஆக பதிவாகி உள்ளது எனவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் ஏறப்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக எந்ததொரு தகவலும் வெளியாகவில்லை.

இதேவேளை, மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் நேற்று பகல் 12.50 மணியளவில் ரிக்டரில் 3.1 அளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் குறிப்பிட்டுள்ளது.

இதேபோன்று கடந்த 27ஆம் திகதியும் சியோனி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் தாக்கம் நாக்பூர் மாவட்டம் வரை உணரப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று மாலை 6.16 மணிக்கு மீண்டும் சியோனி மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளுக்கு வந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.5 என்ற அளவில் பதிவாகியிருந்தது.

இதற்கிடையில் மத்திய பிரதேசத்தின் மற்றொரு மாவட்டமான சிந்த்வாராவில் நேற்று மாலை 5.20 மணிக்கு ரிக்டரில் 3.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேபோன்று, காஷ்மீரில் உள்ள லடாக் பகுதியில் நேற்று இரவு 10.29 மணிக்கு ரிக்டரில் 4.1 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் இரவு 11.36 மணிக்கு மீண்டும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியிருந்தது.

இந்தியாவின் வடக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -