மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை(01) உயிரிழந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை(31) முழுவதும் அவரது கடமைப் பிரிவான களுவாஞ்சிகுடி பகுதியில், நேற்று நள்ளிரவு 12.30 மணி வரைக்கும் அவர் கடமையில் இருந்துள்ளார்.
பின்னர் பாண்டிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அதிகாலை 03 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
60 வயதுடைய உயிரிழந்த வைத்திய அதிகாரிக்கு திடீர் சுகயீனம் மாரடைப்பாக இருக்கலாம் எனவும் அப்பகுதி வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.