Home Sports குற்றத்தை ஒப்புக்கொண்ட கெய்ல்: அதிரடி மன்னனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

குற்றத்தை ஒப்புக்கொண்ட கெய்ல்: அதிரடி மன்னனுக்கு அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

ஐபிஎல் லீக்கின் நடத்தை விதிகளை மீறியதற்காக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கெய்ல் 99 ஓட்டஙள் எடுத்த நிலையில், ஆர்ச்சர் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.

சதத்தை தவறவிட்ட கோபத்தில் போல்டானவுடன் கெய்ல் பேட்டை வீசி எறிந்தார்.

எனினும், இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றிப்பெற்றது.

இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், அபுதாபியில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) நடத்தை விதிகளை மீறியதற்காக அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ஐபிஎல் அறிக்கையில் தெரிவித்துள்ளது .

கெய்ல் ஐபிஎல்-லின் நடத்தை விதிமுறைகளின் லெவல் 1 குற்றத்தில் 2.2-ஐ ஒப்புக் கொண்டார் மற்றும் அபராதத்தை ஏற்றுக்கொண்டார்.

நடத்தை விதிகளின் லெவல் 1 மீறல்களுக்கு, போட்டி நடுவரின் முடிவு இறுதியானது மற்றும் தவிர்க்க முடியாதது என்று ஐபிஎல் தெரிவித்துள்ளது.

ஏதற்காக கெய்லுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்த தகவலை ஐபிஎல் குறிப்பிடவில்லை.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -