படக்குழுவினருக்கு மக்கள் எதிர்ப்பை வெளியிட்டமையினால் பிரபல நடிகை உட்பட குழுவினர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைக்காட்சி நாடகம் ஒன்றை படமாக்க பண்டாரவளை பிரதேசத்திற்கு சென்றிருந்த நடிகர்கள் உட்பட படக்குழுவினருக்கு பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதன் காரணமாக நடிகர், நடிகைகள் உட்பட படக்குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் பண்டாரவளையில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் பிரபல நடிகை ஷாலனி தாரகாவும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.