Home International ஐக்கி அரபு இராஜ்ஜியத்தின் பிரதமருக்கு கொரோனா தடுப்பூசி!

ஐக்கி அரபு இராஜ்ஜியத்தின் பிரதமருக்கு கொரோனா தடுப்பூசி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரதமரும் உதவித் தலைவரும் டுபாய் ஆட்சியாளருமான ஷேக் முஹமட் பின் ராஷித் அல் மக்தூம் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இந்நிலையில், ஷேக் முகமது ஒரு மருத்துவ ஊழியரால் தடுப்பூசி போடும் ஒரு படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.UAE

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் சிறந்த ஆரோக்கியம் கிடைக்க நாங்கள் விரும்புகிறோம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடுப்பூசி கிடைக்க இடைவிடாமல் உழைத்த எங்கள் அணிகள் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஐக்கிய அரபு இராச்சியத்தின் எதிர்காலம் எப்போதும் சிறப்பாக இருக்கும். ” என தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக பல ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சர்களும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நாட்டின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு ஐக்கிய அரபு இராச்சியம் அங்கீகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் கொரோனா தொற்றினால் 135,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 497 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்திய செய்திகள்

- Advertisement -